ஓங்கிய சந்திரபாபு நாயுடுவின் கை : பரபரக்கும் ஆந்திரா..!

தனது எழுபத்தி மூன்றாவது வயதில் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆந்திராவில் முதல்வர் பதவியை கைப்பற்றி உள்ளார்.

Update: 2024-06-05 02:42 GMT

சந்திரபாபு நாயுடுவின் வெற்றியைக் கொண்டாடும் குடும்பத்தினர். 

ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் Vs எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி - பாஜக - ஜன சேனா கட்சி Vs ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா தலைமையில் காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது.

இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதோடு, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றது. இதில், ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.சி Vs எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி + பா.ஜ.க + ஜன சேனா கட்சி Vs ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா தலைமையில் காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது.

இங்கு கடந்த தேர்தலின்போது மக்களவைத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி என ஒன்றைக்கூட கைப்பற்றாத பா.ஜ.க, இந்த முறை தனது முக்கிய பிரசாரமாக `இஸ்லாமிய இட ஒதுக்கீட்டை நீக்குவோம்' என்ற முழக்கத்தைப் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாயிலாக முன்வைத்தது. பா.ஜ.க-வின் இந்த முழக்கமே கூட்டணியிலிருக்கும் கடந்த முறை 3 மக்களவைத் தொகுதிகள், 23 சட்டமன்றத் தொகுதிகளில் வென்ற சந்திரபாபு நாயுடுவுக்கு மாநில சிறுபான்மையினர் மத்தியில் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு சிறையிலடைக்கப்பட்டதும் விவாதப்பொருளானது. 

மறுபக்கம், கடந்த தேர்தலில் 22 மக்களவைத் தொகுதிகள், 151 சட்டமன்றத் தொகுதிகள் வென்ற ஜெகன்மோகன் ரெட்டி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய இட ஒதுக்கீடு அப்படியே நீடிக்கும்' எனக் கூறிவந்தார். இன்னொருபக்கம், பா.ஜ.க-வைப்போலவே ஆந்திராவில் தங்களின் எண்ணிக்கையைத் தொடங்க ஷர்மிளாவை முன்னிறுத்தி காங்கிரஸ் களமிறங்கியிருக்கிறது.

இப்படியான மும்முனைப் போட்டிகளுக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசக் கட்சி தொடந்து முன்னிலை வகித்து வந்தது. தற்போதைய தெலுங்கு தேசக் கட்சி 145 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி 26 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

இந்த தரவுகளின்படி பார்க்கையில், ஜெகன்மோகன் ஆட்சியை இழந்து விட்டார். முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த முறை பாஜக, பவன் கல்யாண் கட்சியோடு கூட்டணி வைத்து, ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களை கைப்பற்றி விட்டார். இதன் மூலம் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆந்திராவின் முதல்வராக பதவியேற்கிறார். வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

Tags:    

Similar News