ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ திடீர் சோதனை
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.;
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை, டெல்லி, மும்பை உள்பட 11 இடங்களில் சோதனை நடக்கிறது.
டெல்லியில் உள்ள, சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, இன்றைய சோதனை நடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சோதனை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே, சிபிஐ சோதனை குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்? எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன் என்று, தனது டிவிட்டர் பதிவில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.