Bus Accident Doda District-ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் உருண்டு 30 பேர் உயிரிழப்பு..!
ஜம்மு காஷ்மீரின் தோடாவில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 30 பேர் இறந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
Bus Accident Doda District,Jammu and Kashmir,Doda Kashmir,Doda Bus Accident
ஸ்ரீநகரின் தென்கிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் (124 மைல்) தொலைவில், இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் தோடா மாவட்டத்தில், பயணிகள் பேருந்து இமயமலை நெடுஞ்சாலையில் இருந்து சரிந்து செங்குத்தான சரிவில் மற்றொரு சாலையில் உருண்டு விழுந்ததில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் கிட்டத்தட்ட 24பேருக்கும் மேலானவர்கள் காயமடைந்தனர்.
Bus Accident Doda District
பிரதமர் ஆறுதல்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் தோடாவில் நடந்த பேருந்து விபத்து வேதனை அளிக்கிறது. நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று பிரதமர் அலுவலகம் X.(AFP) இல் பதிவிட்டுள்ளது.
இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதம மந்திரி நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்" என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bus Accident Doda District
குடியரசுத் தலைவர் ஆறுதல்
ஜம்மு காஷ்மீரில் பேருந்து விபத்தில் உயிரிழந்தது குறித்து தாம் மிகுந்த வருத்தமடைவதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.
42 இருக்கைகள் கொண்ட பேருந்து, கிஷ்த்வார் நகரில் இருந்து தெற்கு ஜம்மு நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையை விட்டு விலகி, மலைப் பகுதியில் உள்ள பழைய சாலையில் சுமார் 660 அடி (200 மீட்டர்) கீழே விழுந்ததாக சிவில் நிர்வாகி ஹர்விந்தர் சிங் தெரிவித்தார்.
Bus Accident Doda District
மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.காஷ்மீரின் தோடாவில் விபத்துக்குள்ளான பேருந்தின் அருகே பாதுகாப்புப் பணியாளர்களும் மீட்புப் பணியாளர்களும் திரண்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை உடனுக்குடன் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணங்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.