மகள் பிஸினஸுக்காக ஷார்ஜா அதிகாரி மனைவிக்கு பரிசளிக்க விரும்பிய பினராயி விஜயன்?
kerala gold smuggling case-கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் கேரள முதல்வர் பினராயி விஜயன் குறித்து அளித்த வாக்குமூலம் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
kerala gold smuggling case-தங்கம் கடத்தல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பிறகு தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி எர்ணாகுளம் பிரின்சிபல் செஷன்ஸ் கோர்ட்டில் ஸ்வப்னா சுரேஷ் கடந்த 6-ம் தேதி ரகசிய வாக்குமூலம் அளித்திருந்தார்.
பின்னர் அவர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதாக பரபரப்பாக பேட்டி கொடுத்து வருகிறார். மேலும், முதல்வரின் கிளிஃப் ஹவுசில் பலமுறை முதல்வர் பினராயி விஜயனையும், அவரின் குடும்பத்தினரையும் சந்தித்திருப்பதாகவும் கூறுகிறார். விரைவில் அதற்கான ஆதாரங்களையும், வாக்குமூலம் குறித்த தகவல்களையும் வெளியிடுவேன் என்றும் ஸ்வப்னா சுரேஷ் கூறிவந்தார். இப்படியான சூழலில் ஸ்வப்னா கோர்ட்டில் அளித்த வாக்குமூல தகவல்கள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வப்னா சுரேஸ் கொடுத்த வாக்குமூலத்தில், 2017ம் ஆண்டில் ஷார்ஜா அரசு அதிகாரி கேரளாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலில் அவர் கோழிக்கோட்டுக்கு வருவதாக இருந்தது. ஆனால் பின்னர் திடீரென அவரது வருகை திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு
திருவனந்தபுரத்தில், முதல்வர் பினராயி விஜயனும், அவரது குடும்பத்தினரும் ஷார்ஜாவில் இருந்து வந்த அரசு அதிகாரியை சந்தித்து பேசினார்கள். 2017 செப்டம்பர் 27ம் தேதி கிளிஃப் ஹவுசில் முதல்வரின் குடும்பத்தினர் ஷார்ஜா அதிகாரியிடம் அரசு விவகாரத்தை தவிர்த்து தனிப்பட்ட சில பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த நான் உள்ளிட்ட மற்றவர்கள் வெளியேற்றப்பட்டோம். பினராயி விஜயனின் மனைவி, அவரின் மகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான சிவசங்கர், நளினி நட்டோ ஆகியோர் மட்டும் பேச்சுவார்த்தை நடத்திய அறையை பூட்டிக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஷார்ஜாவில் பினராயி விஜயனின் மகள் ஐ.டி பிசினஸ் தொடங்குவது குறித்து அந்த அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது சம்பந்தமாக ஷார்ஜா தகவல் தொழில்நுட்ப அமைச்சரை தொடர்புகொண்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசினார். ஷார்ஜா அரசு அதிகாரியின் மனைவி உள்ளிட்ட சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.அதனால் இந்த பிசினஸ் பேச்சுவார்த்தை பாதியோடு நின்றுபோனது.
kerala gold smuggling case-இந்த விஷயங்கள் ஷார்ஜா அதிகாரி கோவளத்துக்கு வந்தபோதுதான் எனக்கு தெரியவந்தது. பிசினஸ் பேச்சுவார்த்தையில் அவர்களை மகிழ்விக்க ஷார்ஜா அதிகாரியின் மனைவிக்கு ஒரு பரிசு அளிக்க பினராயி விஜயன் தரப்பு முயற்சி செய்தனர். ஆனால், அதற்கு அந்த அதிகாரியின் மனைவி சம்மதிக்கவில்லை.
திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரகத்தில் இருந்து சாதாரண பிரியாணி பாத்திரத்தை விட பெரிய அளவில் உள்ள பாத்திரத்தில் பிரியாணி கொண்டுவருவதுபோல முதல்வரின் கிளிஃப் ஹவுசுக்கு பார்சல்கள் அனுப்பப்பட்டன.
அந்த பார்சல்கள் பாயில்ட் பேப்பரால் கவர் செய்யப்பட்டிருந்தது. அதனால் அதில் என்ன இருக்கிறது என்பதை யாரும் பார்க்க முடியாது. அந்த பிரியாணி பாத்திரத்தை நான்குபேர் சேர்ந்து தூக்கிச் சென்றனர். சாதாரண காரில் கொண்டு போக முடியாததால் தூதரக அதிகாரியின் காரில் வைத்து அந்த பாத்திரம் கொண்டுச்செல்லப்பட்டது.
kerala gold smuggling case-இவ்வளவு பெரிய பிரியாணி பாத்திரம் அங்கு செல்வதற்கு சிவசங்கர் வழிகாட்டியாக இருந்தார் என்று ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலத்தில் கூறியிருந்தார். ஆனால் அந்த தகவல்கள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஸ்வப்னா சுரேஷ் பிரியாணி பாத்திரத்தின் அளவுகளைக்கூட வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார். ஸ்வப்னா கோர்ட்டில் அளித்த ரகசிய வாக்குமூலம் வெளியாகி இருப்பது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.