தூண்டிவிட்ட நாடுகள் நழுவியதால் அசிங்கப்பட்ட கனடா?
காலிஸ்தான் பயங்கரவாதிகள் விவகாரத்தில் கனடா இந்தியாவிடம் அசிங்கப்பட்டு நிற்கிறது.
இந்தியா Canada நாட்டு பிரஜையை தனது நாட்டில் புகுந்து கொன்றது என்பது தனது நாட்டின் இறையான்மைக்கு எதிரானது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ் இந்தியா மீது குற்றம் சாட்டினார்.
அதுவும் இந்தியாவின் (RAW) அதன் பின்னால் இருப்பதாகவும், அதில் நேரடியாக இந்திய தூதரக அதிகாரிகள் இருப்பதாகவும் பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார். ஆனால் அது அவசரப்பட்டு குற்றம் சுமத்தப்பட்ட ஒரு சிக்கலில் மாட்டி விட்டது. அவருக்கு ஆதரவை தரும் என்று எதிர்பார்த்த அவருக்கு, மாறாக பெரும் பின்னடைவை தந்து விட்டது. உண்மையில் அதற்கு பின்னால் நிறைய விஷயங்கள் இருப்பது இப்போது வெளிவரத் துவங்கி இருக்கிறது.
அதற்கு முன்பு சில விஷயங்களை பார்க்கலாம். ஜஸ்டின் மட்டுமல்ல, அவர் தந்தையும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நேரடியாக ஆதரவாக இருந்தார். அவர் பிரதமராக இருந்த போது, இந்தியாவின் கனிஷ்கா விமானம் விழுந்து அதில் 268 கனடியர், 27 பிரிட்டிஷ், 24 இந்தியர்கள், மற்றவர்கள் 10, விமான பணியாளர்கள் 22 பேர் என்று மொத்தம் 351 இறந்து போனார்கள். அந்த விமானம் 31,000 அடி பறந்து கொண்டிருந்த வேளையில், அதில் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்தது. அட்லாண்டிக் கடலில் விழுந்ததில் யாரும் உயிர் தப்பிக்கவில்லை. அதிகம் இறந்தவர்கள் கனடியர்கள் தான்.
அதுபற்றிய கேஸுக்கு கனடா ஆதரவு தராமல் இழுத்தடித்தது. மேலும், அதில் நேரடி சாட்சியாக இருந்த 5 பேர் ஒன்றன் பின் ஒன்றாக கொல்லப்பட்டார்கள். எல்லா சாட்சிகளும் கொல்லப்பட்ட பின்னர், குற்றச்சாட்டுக்கு சாட்சிகள் எதுவும் இல்லை என்று வழக்கை மூடி விட்டார்கள்.
அதில் தொடர்புடையவர்கள், மற்றும் மற்ற கேஸ்களில் தேடப்பட்ட 33 மோசமான குற்றாவாளிகள் இன்றும் கனடாவில் அரசின் பாதுகாப்போடு இருக்கிறார்கள் என்று பலமுறை முறையிட்டும், அவர்களை கனடா இந்தியாவிற்கு அனுப்ப மறுத்து விட்டது.
இந்த நிலையில் அங்கே இருக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகள், இந்தியாவிற்கு எதிராக நமது தூதரகத்தில் புகுந்து தாக்கி, இந்திய கொடியை இறக்கி, அசிங்கப்படுத்தி, அலுவலகத்தை சேதப்படுத்தியது. அதை தடுக்க முயன்ற தேசபக்தி கொண்ட இந்தியர்களை தாக்கியது, போலீஸ் அதையும் வேடிக்கை பார்த்தது. அதே நேரத்தில் இங்கிலாந்திலும் அதே போன்ற செயலை செய்தார்கள் என்பதால் எல்லாம் திட்டமிட்டு செயல்படுத்தியது என்பது புரியும்.
அது மட்டுமல்ல, கனடாவில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகளின் போட்டோக்களுடன் போஸ்டர்களை தெருவில் ஒட்டி அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று எச்சரித்தது. கனடா அரசு எதுவும் செய்யவிலை.
இந்திய தூதரகத்திற்கு போதுமான பாதுகாப்பை வழங்காததை கண்டித்து, இந்தியா, இங்கிலாந்து மற்றும் கனடா தூதரகங்களுக்கு கொடுத்த பாதுகாப்பை இந்தியாவில் விலக்கிக் கொள்ள, அதன் பின்னர் மற்ற நாடுகள் நடவடிக்கை எடுத்து, போதுமான பாதுகாப்பை கொடுத்தது. இங்கிலாந்து அதில் ஈடுபட்டவர்களை கைது செய்கிறது. ஆனால் கனடா பேருக்கு சில பாதுகாப்பை மட்டும் கொடுத்தது.
இந்த நிலையில், இந்தியாவின் வேண்டுகோளை எதுவும் நிறைவேற்றாத கனடா, அங்கே இருக்கு காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதையும், கோயில்கள் இடிப்பையும், தூதரகத்திக்ரு அச்சுறுத்தலையும் தொடர்ந்து தந்தார்கள். இந்தியர்கள் கொல்லப்படுவார்கள் என்று எச்சரித்தார்கள்.
அந்த நிலையில் NIA வால் தேடப்பட்ட 33 பேரில், முக்கியமான காலிஸ்தான் தீவிரவாதிகள் மூன்று பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள். அதை கொன்றது இந்தியா என்ற சந்த்தேகம் அவர்களுக்கு வருவதற்கு முன்பு, நம்ம மக்களே அதை செய்ததற்காக மோடி, அஜித் தோவல், RAW விற்கும் நன்றி சொல்ல, கனடா அரசு விசாரணையை ஆரம்பித்தது. ஆனால் இதுவரை எந்த ஆதாரங்களையும் நேரடியாக எடுக்க முடியவில்லை.
அந்த நிலையில் G20 மாநாட்டிற்கு இந்தியா வந்த கனடா பிரதமரின் விமானத்தில் மோப்ப நாய்களை வைத்து சோதனை செய்த போது சில சந்தேகங்கள் எழுந்தது. அதன் படி மேலும் சில சோதனைகளை செய்ய முறைப்படி அனுமதி கோரியதாகவும், அதற்கு முதலில் நிராகரித்த பிரதமர் பின்பு ஒத்துக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அதில் போதைப்பொருட்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும், ஏதோ சில விஷயங்கள் மாட்டியிருக்கலாம். ஆனால் அது விமான கோளாறு என்று தான் வெளியே சொல்லப்பட்டது. பெரும்பாலும் பிரதமரின் விமானங்களில் அது போன்ற Technical Issues வராது என்பதை பலரும் அறிவார்கள்.
மேலும் இந்திய பிரதமர் மோடியின் நேரடி சந்திப்பில், உங்கள் நாட்டில் இந்திய தூதரகத்தை தாகுவதும், இந்திய மக்களை தாக்குவதும் தான் கருத்து சுதந்திரமா என்று நம் பிரதமர் நேரடியாக கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் பத்திரிக்கைகள், Indian PM scolded Canadian PM என்று செய்திகள் போட, அங்கே எதிர்கட்சிகளும், மக்களும் பிரதமர் ஜஸ்டினை விமர்சிக்க தொடங்கி விட்டார்கள். ஏற்கனவே சென்ற G20 மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் அவரை திட்டியதை நாம் அறிவோம்.
இந்த சூழலில், விமான சோதனை முடிந்து, அதில் சில விஷயங்கள் (போதைப்பொருள்?) கைப்பற்றப்பட்டதாகவும், அது பிரதமர் அலுவலக வேண்டுகோளுக்கு இணங்க வெளியே சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் ஒரு கனடா போன்ற பெரிய நாட்டின் பிரதமருக்கு நடப்பது என்பது அசிங்கம் என உலகம் பரிகாசித்தது.
இந்த சூழலில், அவமானப்பட்டு கனடா சென்ற ஜஸ்டின், உடனே பாராளுமன்றத்தில் கோபத்தின் விளைவாக அவசரப்பட்டு, கனடாவில் நடந்த கொலையில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாக சொல்ல, அது மிகப்பெரிய பிரச்சினையாகியது. முதலில் அதை ஆதரித்த எதிர்கட்சிகள், இந்தியாவை எதிர்த்தது. இந்தியாவில் நடந்த விஷயங்களை அறிந்த பின், இது தவறான குற்றச்சாட்டு என்று புரிந்து கொண்டு ஆதாரங்களை கனடாவின் பிரதமரிடமே கேட்டது. அவரிடம் இருந்தால் தானே கொடுக்க முடியும்?
அதே சமயம் கனடா பிரதமர் G7 நாடுகளை தொடர்பு கொண்டு இந்தியாவை கண்டிக்க கேட்டுக்கொண்டார். ஆனால் இந்த விஷயங்களை ஆதாரங்களுடன் அவர்களிடம் மட்டுமல்ல, ரஷ்யாவுடனும், Interpol போன்ற UN அமைப்பிலும் ஏற்கனவே, அந்த தீவிரவாதிகள் பற்றியும், அவர்கள் குற்றசெயல்கள், அவர்களின் தற்போதைய வசிப்பிடம், கனடா அரசின் ஆதரவு என்று எல்லா விஷயங்களையும் இந்தியா முக்கி்ய உலகநாடுகளிடம் தெரிவித்துள்ளது.
அதே விஷயங்கள் கனடாவிற்கு பல முறை கொடுத்தும், அது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வரை நமது வெளியுறவுத்துறை ஏற்கனவே பிற நாடுகளுடன் தகவல்களை பகிர்ந்து விட்டதால், கனடாவின் ஆதரவுக்கு பதிலாக, அவர்கள் கனடாவை கேள்வி கேட்க ஆரம்பித்தனர். எதிர்பார்த்த ஆதரவும் கிடைக்கவில்லை, கனடா பிரதமர் தனிமையில் விடப்பட்டார்.
அதனால் கோபப்பட்ட ஜஸ்டின், இந்திய தூதரக அதிகாரியை வெளியேற உத்தரவிட்டார். அதற்கு இந்தியா பதிலாக கனடா தூதரக அதிகாரியை 5 நாட்களில் வெளியேற கட்டளையிட்டது. அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், இந்தியா Travel Advisory ஒன்றை இந்தியர்களுக்கு கொடுத்து என்றாலும், அது உலகளவில் கனடாவின் வர்த்தகம் பார்க்கப்படும் என்பதால், கனடா பாதுகாப்பானது அல்ல, இந்தியர்கள் ஜாக்கிரதையாக பயணிக்க வேண்டுகோள் விடுத்தது.
அது கனடாவிற்கு மிகப்பெரும் சிக்கலை கொடுக்க, அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று அவசரப்பட்டு அலறியது கனடா. ஆனால் இந்தியா அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. கனடியர்களுக்கு இந்திய விசா கொடுப்பதை நிறுத்த உத்தரவிட ஆடிப்போனது கனடா.
இதே போல முன்பு ஒருமுறை சவூதி அரேபியாவுடன் கருத்து சுதந்திரம் இல்லை என்று இதே பிரதமர் ஜஸ்டின் குற்றம் சாட்ட, அதன் இளவரசர், எல்லா கனடா தூதரக அதிகாரிகளை வெளியேறச்சொல்லி அதை மூடியது. கனடாவில் உள்ள அனைத்து தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்தது.
மேலும் அங்கே படித்துக்கொண்டிருந்த 12,500 சவூதி மாணவர்களை வெளியேறச்சொல்லி வேறு நாடுகளில் படிக்க ஏற்பாடு செய்தது. விமான போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தியது. ஆடிப்போன கனடா, பின்பு வேறு வழியில்லாமல் மன்னிப்பு கோரியது. அபோதும் இவர்தான் பிரதமர். அப்படியென்றால் 3,19,000 இந்திய மாணவர்கள் 2022ல் கனடாவிற்கு படிக்க சென்று இருக்கிறார்கள். அவர்கள் நாடு திரும்பினால்?
மேலும், அமெரிக்கா ஓப்பனாக சொல்ல முடியாததை, கனடா வழியாகவே சொல்லும். அப்படி அமெரிக்காவிற்கு சேவகம் செய்யும் அடிமை நாடு கனடா என்பதால், ஏற்கனவே உலகில் பல நாடுகள் அதன் மீது கடும் வெறுப்பில் இருக்கின்றன. இப்போது இந்தியாவிற்கு அந்த நாடுகள் தாமாக முன்வந்து ஆதரவு தந்துள்ளது. அதில் சீனாவும் இருப்பது ஆச்சரியம் தான்.
இந்த சூழலில், தனித்து விடப்பட்ட கனடா மக்கள், ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் கனடாவிற்கு இது மேலும் பின்னடைவை தரும் என்பதால், கடுமையாக பிரதமரை விமர்சித்து வருகிறார்கள். மேலும் இந்தியா மீது குற்றம் சாட்டியதற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க கேட்கிறார்கள்.
ஏற்கனவே கனடாவில் உள்ள சீக்கிய தீவிரவாதிகள், நீண்ட கத்திகளோடும், துப்பாக்கிகளோடும் வலம் வருவதும், அடங்காமல் திரிவதும், போதைப்பொருள் கடத்துவதும், சட்டம் ஒழுங்கை மதிக்காததும், பெரிய பிரச்சினையை மற்றவர்களுக்கு கொடுத்த வந்த வேளையில் இப்போது அந்த கோபம், சீக்கியர்கள் மீது திரும்பியுள்ளது.
மேலும் கனடா ஒரே நாடாக இருந்தாலும், வடக்கு கனடா, பிரிட்டிஷ் கொலம்பியா, க்யூபெக் போன்றவை ஏற்கனவே தனி நாடு கோரிவரும் நிலையில், இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிடுவதால், இந்தியா பதிலுக்கு செய்தால், அந்த நாடு அழிந்து போகும் என்று எதிர்கட்சிகள் எச்சரிக்க, ஜஸ்டின் அரசியல் சரிந்து விட்டது. ஏற்கனவே 15%மாக இருந்த ஆதரவு இப்போது மொத்தமும் சரிந்து விட்டதாக சொல்கிறார்கள்.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து கனடாவிற்கு asylum தேடிப்போனவர்கள். அவர்களில் 3 பேர் கொல்லப்பட்ட வேளையில், இப்போது தேடப்படும் இன்னொரு காலிஸ்தான் தீவிரவாதி அதே ஸ்டைலில் அடையாளம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டுள்ளான்.
ஏற்கனவே கனடா கடும் நெருக்கடியில் உள்ள வேளையில், அது அப்படித்தான் கொல்வோம், என்ன செய்யமுடியுமோ, செஞ்சுக்கோ என்று சொல்வது போல இந்தியா நிமிர்ந்து நிற்க, கனடா மக்கள் தங்கள் பிரதமர் செய்த தவறால் ஒட்டுமொத்த கனடாவும் உலக அளவில் அசிங்கப்பட்டு நிற்பதாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தியா இதுவரை இதுபோன்று அக்ரெஸிவாக எப்போதும் இருந்ததில்லை, இன்றும் கனிவாக இருந்தாலும் சில விஷயஙகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது சில விஷயங்களில் நல்லுறவிற்காக விட்டுக்கொடுத்தாலும், இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளாது என்று இந்தியா உலகிற்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறது!
ஏற்கனவே பாகிஸ்தானை பிச்சையெடுக்க வைத்த இந்தியா, சீனாவை பெரும் பொருளாதார சிக்கலில் நிறுத்தியுள்ளது. சீனா தைவான் மீது தாக்குதல் தொடுக்க தயாராகிக்கொண்டு இருக்கும் வேளையில், இந்தியாவின் உதவி அமெரிக்காவிற்கு அவசியம் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியா அமெரிக்காவிற்கு ஆதரவாக போர் தொடுக்காவிட்டால்கூட, ஒதுங்கிக்கொண்டாலே அமெரிக்காவிற்கு பெரிய பின்னடைவு ஏற்படும். வேகமாக வளரும் இந்திய பொருளாதாரத்தை நம்பி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இருப்பதால், இந்தியாவை பகைத்துக் கொள்ள முடியாத சூழலில் உலக நாடுகள் உள்ளன. கனடா செய்த செயல், சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொண்டது தான்.
இந்த சூழலில் சீக்கியர்கள் அல்லாத இந்தியர்கள், குறிப்பாக இந்துக்களும், அவர்கள் கோயில்கள், உடமைகள் ரொடர்ந்து தாக்கப்படுவதால், கனடா பாதுகாப்பில்லாத நாடாக மாறியுள்ளது. இது போன்று முன்னெப்போதும் இருந்ததில்லை என்கிறார்கள். இது தொடர்ந்தால் அங்குள்ள இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் உருவாகலாம், இதனால் கடும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று கனடா மக்கள் கலங்கிப்போய் நிற்கின்றனர்.
இது அடுத்த 6 மாதங்களில் நடக்கவிருக்கும் தேர்தலில், ஜஸ்டின் ட்ரூடேவுக்கு பெரிய தோல்வியை தரும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், அடுத்த ஆண்டு இந்தியத் தேர்தலில், அமெரிக்கா முதல் ஐரோப்பியா, கனடா வரையில், மோடியை தோற்கடிக்க திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் வேளையில், கனடாவிற்கு நடந்தது தான் நாளை உங்களுக்கும் நடக்கும் என்று இந்தியா தனது வலுவான செய்தியை உலகிற்கு சொல்லாமல் சொல்லிய எச்சரிக்கையாகவும் இது இருக்கலாம்! Indhea