மாணவ செல்வங்களே தேர்வு பயமா? கவலையே வேண்டாம் -மோடியுடன் பேசுங்கள்...

மாணவ செல்வங்களே தேர்வு பயமா? கவலையே வேண்டாம் பிரதமர் மோடியுடன் 1921 என்ற எண்ணில் பேசி தெளிவு பெற தொடர்ந்து படியுங்கள்.;

Update: 2023-01-24 10:20 GMT
பாரத பிரதமர் மோடி.

ஜனவரி27-ம்தேதி பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார்.

வருகிற ஜனவரி 27ம் தேதி காலை 11.00 மணியளவில் டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் இருந்து இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள 150 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பாரத பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் ஆலோசனைகளை வழங்குகிறார். மேலும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பிரதமர் மாணவர்களுடன் காணொளியில் நேரலையில் பதில் அளிக்கிறார்.


உலகின் மிகப்பெரிய தேர்வு திருவிழா "தேர்வும் தெளிவும் Parikscha Pe Charcha" - பரீட்சையை பற்றி விவாதிப்போம் நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் பங்கு கொள்ள உள்ளனர்.

மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் தங்களுடைய பள்ளிகளில் இருந்து காணொளி காட்சி மூலம் பிரதமருடன் உற்சாகமாக பங்கு கொண்டு ஆலோசனைகளை கேட்க உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விரும்பும் மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் Face Book, Twitter, Instagram மற்றும் You Tube உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் அவருடைய அனுபவங்களை, அறிவுரைகளை கேட்கலாம்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு மிக முக்கிய சிறப்பு அம்சமாக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் innovateindia.mygov.in , NamoApp உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களுடைய கருத்துக்களை, ஆலோசனைகளை, அனுபவங்களை ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பிரதமருக்கு அனுப்பியுள்ளனர்.

இன்று மத்திய கல்வி அமைச்சகம் மேலும் ஒரு அறிய வாய்ப்பாக Inviting #ExamWarriors, parents and teachers to share their inputs for this year's interaction. Call now: 1921 என ஒரு சிறப்பு தொலைபேசி எண்ணை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தாங்கள் சொல்ல விரும்புவதை, தங்களுடைய குரலில் பதிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.

பிரதமருடன் கருத்துக்களை பகிர்வதற்காக பதிவு செய்யக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தொலைபேசி எண் 1921 – ஐ டயல் செய்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களை பிரதமருக்கு தெரிவிக்கும்படி தமிழக தேர்வும், தெளிவும் குழு கேட்டுக்கொள்கிறது.


இந்த சிறப்பு தொலைபேசி எண்: 1921 குறித்து தங்கள் ஊடகங்களில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களுடன் அமர்ந்து பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை தர உள்ளனர். மேலும் தனிப்பட்ட முறையில் தேர்வு குறித்து அமைச்சர்கள் தங்களுடைய அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.


இந்தியாவில் இதுவரை எந்த ஒரு பிரதமரும் தேர்வு பயம் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்தது இல்லை. நமது நாட்டின் எதிர்காலமே மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கையில் தான் இருக்கிறது என் பேசுவதோடு மட்டும் இன்றி அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய மோடி அவர்களது தேர்வு பயத்தை  போக்குவதற்காக நடத்தும் இந்த நிகழ்ச்சி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அவர் மீதான நம்பிக்கையை மேலும் வளர்த்து உள்ளது.

Tags:    

Similar News