இந்தியாவில் ஆப்பிள் போன்: டாடா குழுமம் புதிய திட்டம்

இந்தியாவில் ஆப்பிள் போன்களை தயாரிக்க டாடா நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Update: 2022-09-11 03:20 GMT

தைவான் நிறுவனமான விஸ்ட்ரான், உலகளவில் ஆப்பிள் போன்களின் தயாரிப்பு, உதிரி பாக விநியோகத்தை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனத்துக்கு சீனா, இந்தியாவில் தயாரிப்பு ஆலைகள் உள்ளன.

ஆப்பிள் போன்கள் முதன்மையாக சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. தற்போது கொரோனா பிரச்சினையால் சீனாவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விஸ்ட்ரான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்தியாவில், ஆப்பிள் போன் தயாரிப்பு ஆலையை தொடங்க டாடா குழுமம் முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக விஸ்ட்ரான் நிறுவனத்துடன் டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விரு நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், ஆப்பிள் போன்களை இந்தியாவிலே தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனமாக டாடா குழுமம் திகழும்.

தற்போதைய நிலையில், விஸ்ட்ரான் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் பங்குகளை டாடா குழுமம் வாங்கும் என்றும் அதையடுத்து இவ்விரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் ஆப்பிள் போன்களை தயாரிப்பதற்கென்று புதிய ஆலையை நிறுவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News