முள்ளை முள்ளால் எடுக்க ஒரு பணி நியமனம்...
நம்மில் பலரது கவனத்தை கவராத ஒரு சமாச்சாரம்... உலக அளவில் பலரையும் வாயடைக்க செய்திருக்கிறது..
சமூக வலைதளமான பேஸ்புக்கில் வந்த ஒரு பதிவு. மிகவும் கவனிக்கத்தக்கதாக இருந்தது. இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் இந்த பதிவு கற்பனைகளை தாண்டிய சில உண்மைகளையும் சொல்கிறது. அதனால் இன்ஸ்டா வாசர்களுக்கு பகிர்ந்துள்ளோம். மீண்டும் சொல்கிறேன். இது நமது நிருபர் பேஸ்புக்கில் படித்த பதிவு. இந்த பதிவு பா.ஜ.,வினர் நடத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது. அதனால் நம் வாசகர்களுக்கு தருகிறோம்.
இந்தியாவின் அதி முக்கியத்துவம் வாய்ந்த உளவு பிரிவான ரா விற்கு ரவி சின்ஹாவை நியமித்து இருப்பதாக நேற்றைய தினம் அறிவித்திருக்கிறார்கள். இவர் வரும் ஜூலை மாதம் முதல் நாளில் இருந்து பொறுப்பேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி..... அதனால் என்ன.... என்கிறீர்களா....!!!
முன்னதாக வேறு சில விஷயங்களை பார்த்து விட்டு வருவோம். ஓரிரு நாட்களுக்கு முன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவரை கனடாவில் உள்ள சர்ரே நகரில் வைத்து அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். இவர் குருநானக்கின் போதனைகளை கனடாவில் பரப்புரை செய்யும் தலைவராக....காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி சிலபல அழிச்சாட்டியங்களை எல்லாம் செய்திருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.
விஷயம் வேறெங்கோ புகைவது போல் தோன்றுகிறதல்லவா. அப்படியே இதனையும் தெரிந்து கொள்ளுங்கள். பரம்ஜித்சிங் பஞ்வார் என்பவர் தன்னை காலிஸ்தான் இயக்கத்தின் கமாண்டோ பிரிவு தலைவர் என அறிவித்துக் கொண்டவர். பாகிஸ்தானில் வைத்து சப்தம் இல்லாமல் முடிக்கப்பட்டிருக்கிறார். ஹரவிந்தர் ரிண்டா அல்லது ஹரவிந்தர் சந்தூ... இதே லாஹூரில் வைத்தே அடையாளம் தெரியாத நபர்களால் பட்டப்பகலில் கொல்லப்பட்டிருக்கிறார். இவரை தேடப்படும் நபராக அறிவித்திருக்கிறது நமது இந்திய தேசம்.
இது நடந்து சரியாக ஒரு நாளைக்கு பிறகு ஹேப்பி சங்கேரா என்பவரை இத்தாலியில் வைத்து யாரோ போட்டு தள்ளியிருக்கிறார்கள். இங்கு ஒரு விஷயம் உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். நம் இந்திய பிரதமரை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு பாலத்தில் வைத்து கெரோ செய்தார்களே கடந்த ஆண்டு....அந்த விஷயத்தில் மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் இந்த ஹேப்பி சங்கேரா. பாவம்.....யாரோ இவரை அல்ப ஆயுசில் போக்கடித்து விட்டனர்.
அடுத்து ஒரு மனிதர் இந்த அவ்தார் சிங் கண்டா. இங்கிலாந்தில் வைத்து இங்கிதம் இல்லாமல் முடித்து விட்டார்கள் என்று முனங்கியது அங்கு உள்ள பத்திரிகைகள். என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும் வேளையில் பிஷிர் அமஹது என்பவரை ராவில் பிண்டியில் வைத்து யாரோ கொலை செய்தது எல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது. கொஞ்சம் கலவரமாகி அவதானித்து பார்த்தால்... ஆஃப்கானிஸ்தானில் வைத்து அஜ்ஜாய் அஹமது மற்றும் சையத் நூர் என்பவர்களை யாரோ இரக்கமே இல்லாமல் கொன்று விட்டனர். ஆக கடந்த ஆறு மாதங்களில் எட்டு நபர்களுக்கும் மேல் கொல்லப்பட்டு விட்டனர்.
என்ன நடக்கிறது.....யார்... என்ன செய்கிறார்கள்.... இவர்கள் அனைவருக்கும் என்ன தொடர்பு.....????? அது வேறு ஒன்றும் இல்லை.....கொஞ்சம் அபின்... நிறைய கஞ்சா.... என்று இவர்கள் அனைவரும் யாருக்கும் தொல்லை கொடுக்காமல் தொழில் செய்து வந்திருக்கிறார்கள். போர் அடித்தால் மட்டுமே தனி நாடு கேட்டு பார்ப்பார்கள்..... தங்களை போன்ற காலிகளுக்காக.....
அப்படிப்பட்டவர்களை தேடி தேடி யாரோ பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் ........ எப்பேர்ப்பட்ட அநியாயம் இது. இங்கு நம் தேசத்தில் அப்படியா... இப்படியான அநியாயங்கள் இங்கு நடக்க வாய்ப்பு உண்டா....... பாருங்களேன் பிரதமர் பதவி வகித்த மன்மோகன் சிங் திடீர் ஞானோதயம் பெற்றவராக... நரேந்திர மோடி போன்ற ஒருவர் இனி பிறக்க போவதில்லை... அப்படியே பிறந்தாலும் இந்திய தேசத்திற்கு பிரதமராக வருவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு என்று சொல்லி வைத்திருக்கிறார். இது எதற்காக என்பது தான் புரியவில்லை....ஏதோ சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தெரியும் இவையனைத்தையும் நீங்களே யூகித்து பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள். வேறென்ன சொல்ல இருக்கிறது.... சொல்லுங்கள் பார்க்கலாம்.