Ambedkar Tamil Quotes-ஒடுக்கப்பட்டோரின் ஒப்பற்ற தலைவர், அம்பேத்கர்..!
அம்பேத்கர் சிறு வயதிலிருந்தே சாதி பாகுபாடுகளையும் அவமானங்களையும் சந்தித்தவர். இருப்பினும், இவர் கல்வியில் சிறந்து விளங்கினார்.;
Ambedkar Tamil Quotes
பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று அழைக்கப்படும் அம்பேத்கர், நவீன இந்திய வரலாற்றில் மிக முக்கியமானவர்களில் ஒருவர். இவர் ஒரு சட்ட வல்லுநர். பொருளாதார நிபுணர். சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியல் தலைவர் ஆவார். இவர் சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடினார். மேலும் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்.
Ambedkar Tamil Quotes
டாக்டர் பி.ஆர்.அம்பேதகர் கூறிய தத்துவ வரிகளை படியுங்கள்.
கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளைகளின் கல்விக்கு செலுத்து, அது உனக்கு பயன்தரும்
இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இது பல இனக்குழுக்களின் தேசம். அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால், இந்தியாவின் பூர்வ குடியான தமிழர்களே கொண்டாட முடியும்.
ஒருவன் அடிமைப்பட்டு இருந்தால், அவன் அடிமைபட்டு இருப்பதை உணர்த்தினாலே போதும். பிறகு அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதனை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால், நான் மனிதனே இல்லை.
Ambedkar Tamil Quotes
நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது. உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை.
சாதிய அமைப்பு முறை என்பது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களை, சமூகங்களாக பிரித்து வைத்திருக்கின்றது.
ஒரு மதம் விலங்குகளை தொடுவதை புனிதமாகவும், சக மனிதர்களை தொடுவதை தீட்டாகவும் கருத்துமாயின், அது மதம் அல்ல. அது கேலிக்கூத்து.
அறிவு, நன்னடத்தை, சுயமரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள். இவற்றை தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கின்றது.
Ambedkar Tamil Quotes
ஆடுகளை தான் கோயில்களின் முன் வெட்டுகிறார்களே தவிர சிங்கங்களை அல்ல. ஆடுகளாக இருக்க வேண்டாம். சிங்கங்களாக வீறு கொண்டு எழுங்கள்.
மற்றவர்களின் எல்லா தேவைகளையும் நிவர்த்தி செய்தால் தான், உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால், அந்த பெயர் ஒருபோதும் தேவையில்லை
எவனொருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் விருப்பபடி செயல்படாமல். அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே சுதந்திர மனிதன்
ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கவலை வேண்டாம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கடமையை செய்வோம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது, எதிரியும் நம்மை மதிக்க தொடங்குவான்
குழந்தைப் பேறு சமயத்தில் பெண்கள் பட வேண்டியுள்ள வேதனைகளை, ஆண்கள் பட வேண்டியிருந்தால், அவர்களில் யாரும் வாழ்நாளில் ஒரு முறைக்குமேல் குழந்தை பெற இணங்க மாட்டார்கள்.
ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாக வாழ்வதை விட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது.
Ambedkar Tamil Quotes
சிறந்ததோர் எதிர்காலத்தை அமைப்பதற்கான தற்போதைய இன்பங்களை தியாகம் செய்து இடையறாது செயல்படுங்கள். உங்களுடைய குறிக்கோளை அடையும் வரை தீ போல் சுடும் துன்பங்களை ஏற்றுத் தியாகம் செய்ய முன்வாருங்கள்.
தன்னை உயர்ந்தவனாகவும் மற்றோரை தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் ஒரு மனநோயாளி
குருட்டு பக்தி தன்னறிவை இழக்கச் செய்யும், பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் யாருடைய வாக்குறுதியையும் நம்பக்கூடாது.
சாதிதான் சமூகம் என்றால், வீசும் காற்றில் விசம் பரவட்டும்
ஆண்மை என்ற சொல்லை அழிக்காமல் பெண்களுக்கு விடுதலை இல்லை. மதம் என்ற கைவிலங்கை உடைக்காமல் மக்களுக்கு விடுதலை இல்லை
Ambedkar Tamil Quotes
கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது.
மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் உனக்கு வேண்டாம்
ஜாதியை ஒழிக்க நினைப்பவர்கள் ஜாதித் தலைவராக மாற்றப்படுவது மாறாதவரை வரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை
ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்
உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பது இல்லை . ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது
Ambedkar Tamil Quotes
லட்சியங்களுக்கு விசுவாசமாக நடப்பதற்கு பதிலாக, கட்டளைகளுக்கு இயங்க நடப்பதே வாழ்க்கை ஆகி விடுகிறது.
வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்
நீ பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக போராட வில்லையெனில் அச்சமூகத்தின் முதல் சாபக்கேடு நீ தான்.