ambedkar quotes tamil-தீண்டாமைக்கு எதிராக போராடிய அம்பேத்கர் என்ன சொல்லி இருக்கார்..? படீங்க..!

ambedkar quotes tamil-அம்பவாடே என்னும் கிராமத்தில் பிறந்ததால் இவரை அம்பவாதேகர் என்று அழைக்கப்பட்டு பின்னர் அதுவே 'அம்பேத்கர்' என்றானது என்பது சிலரது கருத்து

Update: 2023-01-10 10:40 GMT

ambedkar quotes tamil-டாக்டர்.அம்பேத்கர்.(கோப்பு படம்)

ambedkar quotes tamil-பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி பிறந்தார். இவர் பாபாசாகேப் அம்பேத்கர் என்றும் அழைக்கப்படுபவர். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் இவரே. உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியரும் இவர்தான்.

பட்டியல் சாதி மக்களுக்கென அமைப்பு ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர் ஞானம் பெற்றவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'நவ புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்.


இதற்கெல்லாம் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்குவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990ம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. டாக்டர்.அம்பேத்கரின் மேற்கோள்கள்..இதோ உங்களுக்காக..!

நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது.. உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை.

மற்றவர்களின் எல்லா தேவைகளையும் நிவர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்த பெயர் ஒருபோதும் தேவையில்லை.

வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கவலை வேண்டாம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கடமையை செய்வோம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது எதிரியும் நம்மை மதிக்கத்  தொடங்குவான்.

எவனொருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல். அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ, அவனே சுதந்திர மனிதன்.

அறிவு நன்னடத்தை சுயமரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள் இவற்றைத்  தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.


ambedkar quotes tamil

ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தை குழிதோண்டிப் புதையுங்கள்.

உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளை பொறுத்து தான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது.

மகாத்மாக்கள் வந்தார்கள், மகாத்மாக்கள் மறைந்தார்கள். ஆனால், தீண்டாமை இன்னும் அப்படியே தான் இருக்கிறது.

தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போகச்  செய்கின்றது.

கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளையின் கல்விக்கு செலுத்து, அது உனக்கு பயன் தரும்.

ambedkar quotes tamil

சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய இன்பங்களை தியாகம் செய்து பாடுபடுங்கள். குறிக்கோளை எட்டும் வரை தீ போல் சுடும் கடும் துன்பங்களை ஏற்று தியாகம் செய்யுங்கள்.

எப்போதோ சொன்ன ஒரே கருத்தை சிந்தனையுள்ள எந்த மனிதனும் பிடித்துக் கொண்டிருக்கமாட்டான்.

அறிவை தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும்.

ஆடுகளைத் தான் கோவில்களின் முன் வெட்டுகிறார்களே தவிர சிங்கங்களை அல்ல.. ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களாக வீறு கொண்டு எழுங்கள்.

நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று

  • முதல் தெய்வம் அறிவு.
  • இரண்டாவது சுயமரியாதை.
  • மூன்றாவது நன்னடத்தை.

இவற்றைத்  தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.


ambedkar quotes tamil

ஒருவன் அடிமைப்பட்டு இருந்தால் அவன் அடிமைப்பட்டு இருப்பதை உணர்த்தினாலே போதும். பிறகு அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.

நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமை இல்லை.

சாதி அமைப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பெண்களே ஆவர். ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு சாதியை கடத்துவது அவர்கள் மீது விதிக்கப்பட்டிருக்கிறது.

சாதிகள் அனைத்துமே தேசவிரோத சக்திகள்.

இந்த சமூகம் உங்களுக்கு சுதந்திரமான உணர்வைத் தராத வரை, சட்டம் எத்தகைய விடுதலையை உங்களுக்கு அளித்தாலும் அதனால் பயன் இல்லை.

ambedkar quotes tamil

சமுதாய சிந்தனைகளை விட வகுப்பைப் பற்றிய எண்ணமே மேலோங்கி ஆட்சி செலுத்தும் ஓர் அமைப்பு இந்து சமுதாய அமைப்பு.

சாதிய அமைப்பு முறை என்பது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களை சமூகங்களாக பிரித்து வைத்திருக்கின்றது.

குழந்தைப் பேறு சமயத்தில் பெண்கள் பட வேண்டியுள்ள வேதனைகளை ஆண்கள் பட வேண்டியிருந்தால் அவர்களில் யாரும் வாழ்நாளில் ஒரு முறைக்குமேல் குழந்தை பெற இணங்க மாட்டார்கள்.

சாதி அமைப்பு புனிதமாக கட்டப்பட்டிருக்கிறது இந்த புனிதத்தன்மையை முதலீடாக கொண்டு இயங்கும் மதத்தையும் சாஸ்திரங்கள் மீதான நம்பிக்கையும் ஒழிக்க வேண்டும்.

பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லை எனில் அந்த சமூகத்தின் முதல் சாபக்கேடு நீ தான்.


ambedkar quotes tamil

ஜாதியை ஒழிக்க நினைப்பவர்கள் ஜாதித் தலைவராக மாற்றப்படுவது மாறாதவரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை.

கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கையை விட ஏழைகளுக்கு கொடுக்கும் கல்வி மேலானது.

ஒரு மதம் விலங்குகளை தொடுவதை புனிதமாகவும் சக மனிதர்களை தொடுவதை தீட்டாகவும் கருத்துமாயின் அது மதம் அல்ல. அது கேலிக்கூத்து.!

சிந்தனை விடுதலையே அனைத்து விடுதலைக்கும் அடிப்படையானது.

ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுயமரியாதை. இதை இழந்து வாழ்வது தான் பெரிய அவமானம்.


ambedkar quotes tamil

எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதனை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால் நான் மனிதனே இல்லை.

சாதி எனும் கீழ்த்தனத்தினால் தான் பெரும்பாலான மக்கள் மனிதத்தன்மை இல்லாமல் வாழ்கிறார்கள்.

இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இது பல இனக்குழுக்களின் தேசம். அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வ குடியான தமிழர்களே கொண்டாட முடியும்.

Tags:    

Similar News