பொருளாதார மறுமலர்ச்சிக்கு நடவடிக்கை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கொரோனா இரண்டாவது அலை காலகட்டத்திலும் பொருளாதாரம் மறுமலர்ச்சி அடைய தேவையான நடவடிக்கையை மத்திய அரசு செய்து வருவதாக நிதி அமைச்சர் கூறினார்.

Update: 2021-04-21 06:16 GMT

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதையும்  மீறி பொருளாதார மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. அதை  உறுதி செய்வதற்காக, மத்திய அரசு பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை வணிகர்களுக்கான சேம்பர் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் பேசினார். அவர் பேசும்போது,

கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலையை மீறி, பொருளாதார மறுமலர்ச்சி அடைந்து வருவதை  உறுதி செய்வதற்கு  மத்திய அரசு பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அரசுக்கும், தொழில்துறையினருக்கும் இடையே ஒரு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையே  பரஸ்பர வளர்ச்சியை தக்கவைப்பதாக இருக்கும். அதேபோல   வளர்ச்சிப் போக்கில் இடையூறுகள் இருக்கக் கூடாது. அப்படி இருப்பின் அது அவநம்பிக்கையை ஏற்படுத்தும். அதுவே  நம்பிக்கையின்மைக்கும் வழிவகுக்கும்.  மேற்கு வங்க மாநில தொழில்கள் செழிக்க, 'ஆக்ஸிஜன்' தேவைப்படுகிறது. மேலும் உலகமயமாக்கப்பட்ட ஒரு அணுகுமுறையும் தேவைப்படுகிறது.

 மாநிலத்தில் உள்ள எல்லா தொழில்களும்  வளர இன்னும் நிறைய ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இந்தியாவின் வரலாறு வங்காளத்திலிருந்துதான்  எழுதப்பட்டது. ஆனால், டார்ஜிலிங் டீ போன்ற தயாரிப்புகள் கூட இப்போது நலிந்து வருகின்றன. கொல்கத்தாவின்   தொழில்கள் கடந்த காலங்களில் பிரகாசமாக இருந்தது. மீண்டும் அவற்றை பிரகாசிக்கச்  செய்ய வேண்டும். வங்காளமும் அதன் பாரம்பரியமும் பாதுகாக்கப்பட வேண்டும்'' இவ்வாறு நிதி அமைச்சர்   பேசினார்.

Tags:    

Similar News