பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு..!

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு மத்திய அரசு தாராளமாக நிதியும், 5ஜி அலைக்கற்றையும் ஒதுக்கீடு செய்துள்ளது.

Update: 2024-07-27 05:35 GMT

பிஎஸ்ன்ல் 5 ஜி -கோப்பு படம் 

தனியார் மொபைல் போன் சேவைகளில் இருந்து விலகி மத்திய அரசின் மொபைல்போன் சேவைகளை பயன்படுத்த மக்கள் தயாராகி வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பிற மொபைல் சேவைகளில் இருந்து மத்திய அரசின் சேவைக்கு மாறியுள்ளனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பிஎஸ்என்எல்ஐ மேம்படுத்த மத்திய அரசு துல்லியமாக காய்நகர்த்தி வருகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தை மறுகட்டமைப்பு செய்யவும் நவீன தொழில்நுட்பங்களுக்கேற்ப மேம்படுத்தவும் மத்திய பட்ஜெட்டில் ரூ.82,916 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றம் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ரூ.1.28 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ரூ.82,916 கோடி பிஎஸ்என்எல்லுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் மத்திய தொலைதொடா்புத்துறை, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவன ஊழியா்களுக்கு ஒய்வூதியத் தொகையாக ரூ.17,510 கோடி வழங்கப்படவுள்ளது. அதேபோல் எம்எடிஎன்எல் நிறுவனத்தின் பத்திரங்களுக்கு ரூ.3,668.97 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்துக்கு ரூ.1,806.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் உள்நாட்டில் தொலைதொடா்புத்துறை சார்ந்த உதிரி பாகங்களை ஊக்குவிக்கும் வகையில் ‘மதா்போர்டு’களுக்கான சுங்கவரி 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில் மதா்போர்டுகளை தயாரிக்க பயன்படும் முக்கிய தாதுக்களுக்கு சுங்கவரியிலிருந்து முழுவதுமாக விலக்களிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News