மகாராஷ்டிராவின் பர்பானி மற்றும் பீட் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பறவைக்காய்ச்சல் கண்டறிந்துள்ள நிலையில், அங்குள்ள 2000-க்கும் மேற்பட்ட பறவைகளை அழிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளாவில் தொடங்கிய பறவைக்காய்ச்சல் தற்போது வட மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் பர்பானி மற்றும் பீட் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பறவைகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டது என்று சேலு நகர வட்டாட்சியர் குப்தா தெரிவித்துள்ளார். மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள பறவைகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் முக்லிகர் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் கடந்த ஜனவரி 8 முதல் இதுவரை 3,949 பறவைகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.