சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டாயம்

Update: 2021-02-15 05:23 GMT
சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டாயம்
  • whatsapp icon

சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் கட்டாயம் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஃபாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கான நீட்டிக்கப்பட்ட அவகாசம் நேற்று நள்ளிரவுடன் முடிந்த நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாமல் வாகனங்கள் சென்றால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட இரு மடங்கு செலுத்த வேண்டியிருக்கும் எனவும் சாலைப்போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News