கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என ஒடிசாவின் கட்டாக் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒடிசாவில் பல சுகாதாரப் பணியாளர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெயரை பதிவு செய்வதுடன் நிறுத்திக் கொள்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கட்டாக் நகராட்சி ஆணையர், எஸ்சிபி அரசு மருத்துவ கல்லூரியின் டீன் உள்ளிட்டோருக்கு அம் மாவட்ட ஆட்சியர் பவானி சாகர் சயானி நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "கொரோனா தடுப்பூசிகளுக்காக பெயரை பதிவு செய்துள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் வரும் 12-ம் தேதிக்குள் அவற்றை செலுத்திக் கொள்ள வேண்டும். தவறினால் அவர்களின் ஊதியத்தை பிடித்துக் கொள்ள வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.