டெல்லி எல்லைகள் மூடல், பாதுகாப்பு அதிகரிப்பு

Update: 2021-01-29 05:19 GMT

விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக டெல்லி எல்லைகள் மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த சூழலில், கடந்த 26 ம் தேதி டெல்லிக்குள் ட்ராக்டர் பேரணி நடத்தப்பட்டபோது கடும் வன்முறை வெடித்தது. பின்னர் விவசாயிகள் தங்கள் அமைப்பின் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர். இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தின் வரவு செலவு கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதால் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் காரணமாக காசிப்பூர், சிங்கு, ஆச்சந்தி, மங்கேஷ், சபோலி, பியாவ் மன்யாரி எல்லைகள் மூடப்பட்டன. போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News