இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவிவரும் நிலையில் டெல்லியில் மத்தியஅரசு கண்காணிப்பு மையம் ஒன்றை அமைத்துள்ளது.
பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அரசு டெல்லியில் கண்காணிப்பு மையம் ஒன்றை அமைத்துள்ளது. இது நாடு முழுவதுமுள்ள மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவுவதை கண்காணிப்பதுடன், தடுக்கும் வழிமுறைகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.