குஜராத், மத்தியபிரதேசத்தில் பறவைகள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 3-ம் தேதி குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் மானவதார் தாலுகா, கரோ நீர்த்தேக்கத்தில் ஹெரான்ஸ், சீப்பு வாத்துக்கள் உள்ளிட்ட 53 நீர்வாழ் பறவைகள் இறந்து கிடந்தன. இது குறித்து அறிந்த வனத்துறையினர் , மானவதார் கால்நடை மருத்துவமனையில், இறந்த பறவைகளை ஒப்படைத்தனர்.உணவு விஷத்தால் பறவைகள் இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது .அது போல் மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது, இறந்த காகங்களில் வைரஸின் இருப்பை உறுதி செய்துள்ளது.மாநில ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட இறந்த காகங்களின் நான்கு மாதிரிகளில் பறவைகாய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.
பறவைக் காய்ச்சல் குறித்து மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு, வைரஸ் பரவுவதை தடுக்க, ஸ்டாண்டர்ட் ஆப்பரேட்டிங் நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.மேலும் இது குறித்து இந்தூர் மூத்த கால்நடை மருத்துவர் டாக்டர் பிரசாந்த் திவாரி கூறுகையில், விசாரணைக்குப் பிறகு, இந்த வைரஸ் பறவைக் காய்ச்சல் போலவே உள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது, இருப்பினும் அது குறைந்த தொற்றுக்கொண்டதாகும் என்றார்.