கேரளாவில் இறுதியாண்டு படிக்கும் கல்லூரி மாணவர்கள் பத்து மாதங்களுக்கு பின்னர் இன்று வகுப்பிற்கு சென்றனர்.
கொரோனா பரவல் காரணமாக பள்ளி,கல்லுாரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்காக மட்டும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.இரண்டு ஷிப்டுகளில் வகுப்புகள் நடத்தப்படும். மொத்த வகுப்பில் 50 சதவீதம் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும். கொச்சியில் புனித தெரசா கல்லூரி நுழைவு வாயிலில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வெப்பநிலை பரிசோதனைகளை மேற்கொண்கேரளாவில் கல்லூரிகள் மீண்டும் திறப்புடனர்.
பல மாதங்களுக்கு பிறகு கல்லுாரி திறப்பது குறித்து புனித தெரசா கல்லூரி முதல்வர் லிஸி மேத்யூ கூறுகையில், வளாகம் சுத்தம் செய்யப்பட்டு தேவையான அனைத்து துப்புரவு பணிகளும் நிறைவடைந்துள்ளன. வளாகம் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு, சுகாதாரமாகவும் உள்ளது. மாணவர்கள் கைகளை சோப்பு போட்டு கழுவக்கூடிய ஒரு பகுதியை ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.இது குறித்து கல்லுாரி மாணவர் ஒருவர் கூறும் போது பல மாதங்களுக்கு பிறகு கல்லுாரியை திறந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நண்பர்களை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.