ஓட்டலாக மாறும் விமானம்: சாப்பாட்டு பிரியர்கள் குஷி
டெல்லி மீரட் சாலையில் விமான ஓட்டல் விரைவில் திறக்கப்படவுள்ளது.;
உணவு பிரியர்கள் பலர் தினமும் விதவிதமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். சைவமோ? அசைவமோ? பலவிதமான உணவு சாப்பிட வேண்டும் என்றும், அந்த உணவும் இதுவரை இல்லாத ருசியில் இருக்க வேண்டும் என்பதுதான் உணவு பிரியர்களின் ஆசை. உணவு பிரியர்கள் எல்லாம் சரியான உணவு உண்பதில் ஆர்வம் கொண்டிருந்தாலும், அதனை ஒரு வித்தியாசமான இடத்தில் சாப்பிட வேண்டும் என்றே விரும்புவார்கள். ரயில்களை போன்று உள்ள உணவகங்கள், ஜெயில் போன்ற உணவகங்கள், மார்டன் டாய்லெட் உணவகங்கள் என பலவிதமான உணவகங்கள் உள்ளன.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானத்தையே உணவகமாக மாற்றி அமைத்துள்ளனர். இவ்வாறு மாற்றி அமைத்து உருவாக்கப்பட்ட உணவகம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த உணவகம் டெல்லியின் மீரட் விரைவு சாலையில் திறக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் உணவு பிரியர்கள் முதல் குழந்தைகள் வரை என அனைத்து தரப்பினரும் குஷியாக உள்ளனர். இன்னும் என்னென்ன உருவத்தில் உணவகங்கள் வருப்போகிறதோ? எதையெல்லாம் உணவகங்களாக மாற்ற உள்ளார்களோ? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.