சாமானியன் எப்படி இருக்கிறான்?

அறுபத்தி மூன்று வயதில் ராமராஜன் நடித்துள்ள சமானியன் படம் வெற்றிப்படமாக அமைந்துள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது.

Update: 2024-05-25 08:04 GMT

சாமானியன் பட போஸ்டர் 

சாமானியன் கதை:

ஓய்வுப்பெற்ற ராணுவ அதிகாரியான சங்கர நாராயணன் (ராமராஜன்) தனது நண்பர் மூக்கனுடன் (எம்.எஸ். பாஸ்கர்) சென்னைக்கு வருகிறார். இஸ்லாமிய நண்பரான பாசில் பாய் (ராதாரவி) வீட்டில் இருவரும் தங்குகின்றனர். மூவரும் சேர்ந்துக் கொண்டு வங்கி ஒன்றை சூறையாட திட்டம் போடுகின்றனர். வயதான மூவரும் இணைந்து வங்கிக்கு எதிரான போராட்டத்தை நடத்த என்ன காரணம் என்பது தான் இந்த படத்தின் கதை.

63 வயதான நிலையில், ராமராஜனின் வயோதிகம் படம் முழுக்கவே தெரிகிறது. படத்திலும் அவருக்கு வயதான கதாபாத்திரம் தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நடிப்பில் ராமராஜன் வழக்கம் போல தனது கிரவுண்டில் புகுந்து விளையாடி இருக்கிறார். அவருக்கு பக்க துணையாக ராதாரவி மற்றும் எம்.எஸ். பாஸ்கரின் கதாபாத்திரங்களும் அவர்களது நடிப்பும் படத்தை பார்க்க வைக்கிறது. அஜித்தின் துணிவு படத்தில் வங்கியில் நடக்கும் மோசடிகள் குறித்து எச். வினோத் படமாக்கியது போல ராமராஜனின் 'சாமானியன்' படத்திலும் வீட்டு லோன் வாங்கி சிக்கலில் தவிக்கும் சாமானியர்களின் கதையை படமாக்கி உள்ளனர்.


வங்கிகள் மற்றும் நிலங்களை விற்பனை செய்பவர்கள் அதிக வட்டியை வைத்து மக்களை ஏமாற்றுவதாக இந்த படத்தில் இயக்குநர் காட்டியிருக்கிறார். கடந்த வாரம் வெளியான சந்தானத்தின் 'இங்க நான் தான் கிங்கு' படத்திலும் கடன் பிரச்சனை மையக்கருவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிளஸ்: இளையராஜாவின் இசை மற்றும் பாடல்கள் எல்லாமே படத்துக்கு பெரிய பலமாக உள்ளது. சில சர்ப்ரைஸ்களும் இந்த படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. ராமராஜன் ரசிகர்களுக்கான செம ட்ரீட் படமாக இந்த சாமானியன் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படத்தின் ஆரம்பத்திலேயே ஊர்களுக்கு செல்லும் போது பஸ் ஓட்டுநர்கள் நிறுத்தும் உணவகத்தில் அவர்களுக்கான சிறப்பு சாப்பாடு மற்றூம் பயணிகளுக்கு மோசமான சாப்பாடு வழங்குவது போன்ற பல விஷயங்களை படத்தில் அடுக்கிய விதம் சிறப்பாகவே உள்ளது. அருள் செல்வன் ஒளிப்பதிவில் கிராமத்தை காட்டும் காட்சிகள் எல்லாம் அவ்வளவு அருமையாக உள்ளது.

Tags:    

Similar News