மோகனுார் சர்க்கரை ஆலை பள்ளிக்கு மூடுவிழா..! பெற்றோர் அதிர்ச்சியில் தத்தளிப்பு..!

மோகனுார் சர்க்கரை ஆலை பள்ளிக்கு மூடுவிழா பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

Update: 2024-12-21 05:45 GMT


மோகனுார் சர்க்கரை ஆலை பள்ளிக்கு விரைவில் மூடுவிழா பெற்றோர் அதிர்ச்சி body { font-family: Arial, sans-serif; line-height: 1.6; margin: 0; padding: 20px; } h1 { font-size: 24px; background-color: #1E88E5; color: white; padding: 10px; margin-bottom: 20px; } h2 { font-size: 20px; font-weight: bold; margin-top: 30px; } p { font-size: 17px; margin-bottom: 20px; } @media screen and (max-width: 600px) { h1 { font-size: 20px; } h2 { font-size: 18px; } p { font-size: 16px; } }

மோகனுார் சர்க்கரை ஆலை பள்ளிக்கு விரைவில் மூடுவிழா பெற்றோர் அதிர்ச்சி

மோகனுார் சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளி, விரைவில் மூடு-விழா காண்கிறது. நாமக்கல் மாவட்டம், மோகனுாரில், சேலம் கூட்டுறவு சர்க்-கரை ஆலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 1978ல் துவங்கப்பட்-டது.

ஆலை வளாகத்தில் செயல்பட்ட பள்ளி

ஆலை வளாகத்தில் செயல்படும் பள்ளியில், ஆலை அங்கத்-தினர் மற்றும் விவசாயிகளின் குழந்தைகள், குறைந்த செலவில் ஆங்கில வழி கல்வி பயில வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்-டது. எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை செயல்பட்டு வந்த பள்-ளியில், நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து வந்தனர்.

பள்ளியின் சாதனைகள்

இங்கு படித்த பலர் ஐ.ஏ.எஸ்., இன்ஜினியர், டாக்டர்கள் மற்றும் அரசு, தனியார் துறைகளில் உயர்ந்த பதவியில் பணியாற்றி வருகின்றனர். மேலும் இப்பள்ளி அரசு பொதுத்தேர்வில், 100க்கு, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனையும் படைத்துள்ளது.

தற்போதைய நிலை

தற்போது, எல்.கே.ஜி., முதல், பத்தாம் வகுப்பு வரை உள்ள மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஆசிரியர்கள், பணியாளர்கள் என, 25க்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.

பள்ளி மூடல் அறிவிப்பு

இந்நிலையில் கடந்த, 19ல், பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோரை அழைத்த ஆலை நிர்வாகம், 'தமிழக அரசு பள்ளியை மூடுவதாக அறிவித்துள்ளது. அதனால் உங்கள் குழந்தைகளை ஜனவரி முதல், வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள்' என தெரிவித்துள்ளது.

பெற்றோர்களின் அதிர்ச்சி

அதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். திடீரென பள்-ளியை மூடினால், எங்கள் குழந்தைகளை எங்கு சேர்ப்பது என தெரியாமல் விழிபிதுங்கினர். இதையடுத்து, 100க்கும் மேற்பட்ட பெற்றோர், சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் மல்லிகாவை நேரில் சந்தித்து, இது குறித்து முறையிட்டனர்.

தற்காலிக தீர்வு

அதையடுத்து, நடப்பு கல்வி ஆண்டு முழுவதும் பள்ளி செயல்படும் என்றும், அடுத்த கல்வியாண்டில், மாற்றுப்பள்ளியில் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

பெற்றோரின் கருத்து

இது குறித்து, பெற்றோர் கூறுகையில், 'கடந்த, 46 ஆண்டுக-ளாக சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த ஆங்கில வழி பள்ளி, திடீரென மூடப்படுகிறது. அதனால், அதிக கட்டணத்தில் தனியார் பள்ளிகளை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நிர்-வாக குளறுபடி காரணமாகவே பள்ளி மூடப்படுகிறது. எனவே, இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என்றனர்.

ஆலை அலுவலரின் விளக்கம்

இது குறித்து, சர்க்கரை ஆலை தொழிலாளர் நல அலுவலர் தியாகராஜன் கூறுகையில்,'' தமிழகத்தில் உள்ள ஆறு சர்க்கரை ஆலை பள்ளிகளையும், 2015ல், மூடுவதற்கு அரசு உத்தரவிட்-டுள்ளது. இப்பள்ளி, நடப்பு கல்வி ஆண்டுக்கு பின் தொடர்ந்து நடக்காது,'' என்றார்.


Tags:    

Similar News