வன ஆராய்ச்சி நிறுவனத்தில் (TFRI) பல்வேறு காலிப் பணியிடங்கள்

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் (TFRI) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-02-13 05:53 GMT

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) கீழ் இயங்கும் வெப்பமண்டல வன ஆராய்ச்சி நிறுவனம் (TFRI) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி 42 காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள்:

தொழில்நுட்ப உதவியாளர்- 03,  ஸ்டெனோகிராபர்- 02, எல்டிசி- 09, எலக்ட்ரீஷியன்(டெக்னீஷியன்)- 01, பிளம்பர்- 01, தச்சர்- 01, வனக் காவலர்- 03, எம்டிஎஸ்- 16 என மொத்த 42 இடங்கள்.

கல்வித் தகுதி:

தொழில்நுட்ப உதவியாளர் : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து தாவரவியல்/விலங்கியல்/உயிரியல்/உயிர் வேதியியல்/வனவியல் ஆகியவற்றில் பிஎஸ்சி தேர்ச்சி.

ஸ்டெனோகிராபர், LDC: 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி.

எலக்ட்ரிக்கல்(தொழில்நுட்ப நிபுணர்):  10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ சான்றிதழ்.

பிளம்பர், கார்பெண்டர் (தொழில்நுட்ப நிபுணர்):  10ம் வகுப்பு தேர்ச்சி.

வனக் காவலர்: அறிவியலில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.

MTS:  10வது தேர்ச்சி.

வயது வரம்பு:

தொழில்நுட்ப உதவியாளர்: 21 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை

ஸ்டெனோகிராஃபர், LDC, வனக் காவலர், MTS: 18 ஆண்டுகள் முதல் 27 ஆண்டுகள் வரை

எலக்ட்ரிக்கல் (தொழில்நுட்பம்), பிளம்பர், கார்பெண்டர் (தொழில்நுட்ப வல்லுநர்): 18 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை

தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு ICFRE ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை. துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு அனுமதிக்கப்படும். SC/ST/OBC/PWD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விதிமுறைகளின்படி அதிகபட்ச வயது தளர்வு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்:

பொது/OBC/EWS பிரிவினருக்கு ரூ.1,300, மற்ற அனைவருக்கும் ரூ.800.

ஆன்லைனில் விண்ணப்பிக்க 05.03.2022 தேதி கடைசி.

Important Link:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Tags:    

Similar News