தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் (ICMR) பல்வேறுப் பணிகள்

The Indian Council of Medical Research (ICMR) எனப்படும் தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் பல்வேறுப் பணிகள்;

Update: 2021-08-17 05:20 GMT

இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்புகள் வந்துள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதுகுறித்த முழுமையான விபரங்கள்:

1.பணியின் பெயர்: Project Staff Nurse

காலியிடங்கள்: 5 (UR-2, SC-1, EWS-1, OBC-1)

வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.31,500/

கல்வித்தகுதி: Nursing/Midwifery -ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ( முழு விபரங்கள் அட்டவணையில் பார்க்க )


 2. பணியின் பெயர்: Project Semi Skilled Worker (Field)

காலியிடங்கள்: 5 (UR-1, SC-1, EWS-1, OBC-2)

வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.15,800/

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ( முழு விபரங்கள் அட்டவணையில் பார்க்க )


3. பணியின் பெயர்: Project Semi Skilled Worker (Lab)

காலியிடம்: 1 (UR)

வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.15,800/

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் தட்டச்சுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ( முழு விபரங்கள் அட்டவணையில் பார்க்க )


4. பணியின் பெயர்: Senior Project Fellow

காலியிடங்கள்: 2

சம்பளம்: ரூ.35,000/

கல்வித்தகுதி: Microbiology/ Virology/Medical Lab Techno logy/Biotechnology-ல் முதுகலைப் பட்டம் பெற்று NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ( முழு விபரங்கள் அட்டவணையில் பார்க்க )


5. பணியின் பெயர்: ProjectTechnician III (Lab)

காலியிடம்: 1 (UR)

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.18,000/

கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் 2 வருட டிப்ளமோ Medical Laboratory Technician-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல் லது DMLT-ல் ஒரு வருட டிப்ளமோ மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


6. பணியின் பெயர்: Project Junior Nurse

காலியிடங்கள்: 4 (UR-2, OBC-1, SC-1)

வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.18,000/

கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் ANM-ல் சான்றிதழ் பெற்றிருப்பதுடன் ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


7. பணியின் பெயர்: Project Consultant (Medical)

காலியிடம்: 1

வயது: 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.1,00,000/

கல்வித்தகுதி: Community Medicine/PSM அல்லது Epide miology/Applied Epidemio-logy/ Public Health-ல் முது கலைப் பட்டம் தேர்ச்சி பெற் றிருக்க வேண்டும். அல்லது MBBS தேர்ச்சிக்கு பிறகு பொது சுகாதாரம் மற்றும் தொற்று நோய் பிரிவில் Ph.D. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


அனைத்துப் பணிக்கும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரி வினருக்கு 3 வருடமும் வயது வரம்பில் சலுகை உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு /Skill Test மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந் தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

www.icmr.gov.in என்ற இணையதளத்தில் கொடுக் கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும் : https://www.nie.gov.in

மேலே உள்ள லிங்கில் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் முழுவதும் கவனமாக படித்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றி தழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்ளவும்.

தேர்வு நடைபெறும் நாள்:

பணி எண் 1-லிருந்து 6 வரை: 23.8.2021 அன்று தேர்வு நடைபெறும்.

பணி 7-க்கு: 7.9.2021 அன்று நடைபெறும். தேர்வு நடைபெறும்

தேர்வு நடைபெறும் இடம்: ICMR-NIE, Chennai.

Tags:    

Similar News