வைணவ பிரபந்த பாடசாலையில் மாணவர் சேர்க்கை: இந்துசமய அறநிலையத் துறை அறிவிப்பு
இந்து சமய அறநிலையத் துறையின் https:/hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.;
இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நெம்மேலி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் வைணவ பிரபந்த பாடசாலையில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்கவேண்டும். இந்த அறக்கட்டளை நிர்வாகத்தின் மூலம் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறை விட வசதிகளுடன் கூடிய கட்டணமில்லாமல் பயிற்சி வழங்கப்படும், ஊக்கத் தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். கடந்த 12-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. ஏப்ரல் 12-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் https:/hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.