வருமான வரித்துறையில் 155 காலியிடங்கள்: தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணப்பம் செய்யலாம்

மும்பையிலுள்ள வருமான வரி தலைமை ஆணையத்தில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-08-07 16:01 GMT

மும்பையிலுள்ள வருமான வரி தலைமை ஆணையத்தில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணப்பம் செய்யலாம்

இது குறித்த விபரம் வருமாறு:

1.பணியின் பெயர்: Inspector of Income Tax

காலியிடங்கள்: 8

வயதுவரம்பு: 18-லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.44,900/- முதல் 1,42,400/- 

கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Tax Assistant

காலியிடங்கள்: 83

வயதுவரம்பு: 18-லிருந்து 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.25,500/- முதல் 81,100/-

கல்வித்தகுதி: இளநிலை பட்டத்துடன் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்கள் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Multi Tasking Staff

காலியிடங்கள்: 64

வயதுவரம்பு: 18-லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.18,000/- முதல் 56,900/-

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உச்ச வயதுவரம்பில் SC/ST பிரிவினருக்கு 10 வருடங்களும், OBC மற்றும் பொது பிரிவினருக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கும் விளையாட்டு பிரிவில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய

இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : https://www.incometaxmumbai.in

மேலும் கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தை காண

இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : https://www.incometaxmumbai.in

விண்ணப்பிக்கும்போது தேவையான அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யுங்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.8.2021


Tags:    

Similar News