மத்திய அரசின் முத்திரைத்தாள் அச்சகத்தில் Supervisor, Welfare Officer பணிகள்
மத்திய அரசின் முத்திரைத்தாள் அச்சகத்தில் Supervisor , Welfare Officer ஆகிய பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசுக்கு சொந்தமான முத்திரைத்தாள் அச்சகத்தில் (Security Paper Mill) Supervisor , Welfare Officer ஆகிய பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த விபரங்களவான :
1.பணியின் பெயர்: Welfare Officer
காலியிடம்: 1 (UR)
சம்பளவிகிதம்: ரூ.29,740 1,03,000
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Social Science பாடத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஹிந்தியில் பேச தெரிந்திருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Supervisor
காலியிடங்கள்: 3 (UR-1, EWS-1, SC-1)
சம்பளவிகிதம்: ரூ.27,600/- 95,910/-
வயதுவரம்பு: 18 முதல் 30- வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Mechanical/ Electrical/Electronics/Chemical போன்ற ஏதாவதொரு பாடப் பிரிவில் முதல் வகுப்பு டிப் ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல் லது மேற்கண்ட பாடப் பிரிவு கள் ஏதாவதொன்றில் BE/ B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3.பணியின் பெயர்: Supervisor (Environment)
காலியிடம்: 1 (ST)
சம்பளவிகிதம்: ரூ.27,600/- 95,910/-
வயதுவரம்பு: 18 முதல் 30-க் குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Environmental Engineering பாடத்தில் முதல் வகுப்பு டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும் அல்லது முதல் வகுப்பு BE/B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு ஏப்ரல்/மே மாதங்களில் ஹைதராபாத், பெங்களூர் நகரங்களில் நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி, இடம் பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். எழுத்துத் தேர்வில் Professional Know ledge, Logical Reasoning, General Awareness. English Language, Quantitative Aptitude போன்ற பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600 (SC/ST/PWD ரூ.200) கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
www.spmhoshangabad. spmcil.com என்ற இணைய தளம் வழியாக 11.3.2022 தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : Notification click Here