ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) 1226 காலி பணியிடங்கள்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் சர்க்கிள் அடிப்படையிலான 1226 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.;
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) வட்ட அளவிலான அதிகாரிகள் (CBO) 1226 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவியின் பெயர் | மொத்த காலியிடங்கள் |
வட்டம் அளவிலான அதிகாரிகள் (Circle Based Officers) | 1226 |
காலியிடங்கள்:
Regular: தமிழ்நாடு - 250, கர்நாடகா - 250, குஜராத் - 300, மத்தியப் பிரதேசம் - 150, சத்தீஸ்கர் - 50, ராஜஸ்தான் - 100.
Backlog: குஜராத் - 54, கர்நாடகா - 28, மத்தியப் பிரதேசம் - 12, சத்தீஸ்கர் - நாடு - 26, ராஜஸ்தான் - 04.
வயது வரம்பு:
வரும் டிசம்பர் 1ம் தேதியின்படி 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். SC / ST, OBC பிரிவினருக்கு 5 ஆண்டுகள். (NCL) மற்றும் PwDக்கு பிளஸ் 10 ஆண்டுகள் வயது தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம்: ₹ 36,000/- ₹ 36000-1490 / 7-46430-1740 / 2-49910-1990 / 7-63840.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சமமான தகுதி.
தேர்வு செயல்முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.
விண்ணப்பக் கட்டணம்:
UR / OBC / EWS பிரிவினர் ரூ.750/- செலுத்த வேண்டும்.
SC / ST / PwD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தகுதியான விண்ணப்பதாரர்கள் SBI IBPS ஆன்லைன் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வரும் 29/12/2021 கடைசி தேதி. https://ibpsonline.ibps.in/sbircbonov21/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு https://bank.sbi/careers என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.