selfconfidence- கடமையோடு செய்தால் வெற்றி..! கடமைக்கு செய்தால் தோல்வி..!

Self Confidence -வாழ்க்கை என்பது பல வித கடமைகள் நிறைந்தது. எந்த ஒரு வேலையானாலும்அதனை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ய பழகுங்கள்.. அது வெற்றியைமட்டுந்தான் தரும்...;

Update: 2022-10-13 05:07 GMT

தன்னம்பிக்கை கட்டுரை.(கோப்பு படம்)

selfconfidence series ...manase...manase. 14..


selfconfidence series ...manase...manase...

மனிதர்களாக பிறந்த நம் அனைவருக்குமே ஒரு கொள்கை, லட்சியம், என இருக்க வேண்டும். ஒரு சிலர் ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், வீழ்ந்தோம் என இருந்துவிட்டு செல்கின்றனர். அது முற்றிலும் தவறாகும். நாம்இந்த உலகில் வாழ்ந்ததற்கான அர்த்தமே நாம் ஏதாவது ஒரு துறையில் சாதித்திருக்க வேண்டும். மற்றவர்கள் போல் இருந்துவிட்டு இறப்பதல்ல வாழ்க்கை...

கொள்கை, லட்சியம்,பிடிப்பு உள்ளவர்கள் எவருமே இதுபோல் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய லட்சியத்தினை அடையும் வரை அவர்கள் துாக்கத்தினை தொலைத்திருப்பர்.. பல விஷயங்களில் விலகியே இருந்திருப்பார்கள்...சராசரி மனிதர்களால் நிச்சயம் வெற்றிக்கோட்டினை தொட்டுவிட முடியாது. அதற்காக நாம் அதிகம் உழைக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியானது நம் பின்னால் வரும். உட்கார்ந்த இடத்தில் நமக்கு வெற்றி கிடைத்துவிடாது.

selfconfidence series ...manase...manase. 14..


selfconfidence series ...manase...manase. 14..

அர்ப்பணிப்பு தேவை 

அதாவது நம்மில் பலர் அவர்களிடம் ஏதாவது ஒரு வேலையை ஒப்படைத்தாலும் அதனை அவர்கள் சரிவர திட்டமிட்டு செய்வதில்லை. அப்படியென்றால் நாம் நினைத்தது போல் பினிஷிங் இருக்காது அந்த வேலையில். ஏதோ கொடுத்தார்கள்...நாமும் செய்துவிட்டோம்.. என்று செய்து இருப்பார்கள். அது நம்மை திருப்திபடுத்தாது. இதுபோல் இருப்பவர்களிடம் வாழ்க்கையில் கொள்கை பிடிப்பு என்பதே இருக்காது. அதாவது அதுதான் கடமைக்கு செய்வது...என்பது அந்த செயல்பாடு சிறக்காது.

அதே முழு அர்ப்பணிப்போடு எந்தவித எதிர்பார்ப்பும்இல்லாமல் நாம் செய்யும் வேலையில் எவரும் நம்மை கூப்பிட்டு கேட்ககூடாது என்று தனியாக திட்டமிட்டு செயலாற்றுகிறார்களே ...அதுதாங்க கடமையோடு செய்தல் என்பது. இதுபோன்ற நபர்களிடம் நீங்கள் வேலையை ஒப்படைத்தீர்களானால் நீங்கள் எதிர்பார்த்ததைவிட ஒரு படி மேல் அந்த வேலையை கனகச்சிதமாக நாம் எதுவும் சொல்லமுடியாத படி க்ளீனாக முடித்திருப்பார்கள் அந்த வேலையை... அதுதாங்க கடமைஎன்பது.

selfconfidence series ...manase...manase. 14..


selfconfidence series ...manase...manase. 14..

இக்கால இளையதலைமுறையினரில் பலர் அப்படித்தான்இருக்கின்றனர். அவர்களாகவே சொல்லட்டும் நாம் அப்புறம் செய்யலாம்..என சும்மாவே உட்கார்ந்திருப்பார்கள்...உட்கார்ந்திருக்கிறார்கள்.. இதுபோன்றோரிடம் உழைக்கும் என்ற எண்ணம் இருக்காது. இவர்கள் எல்லாம் அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கு மட்டும் வேலை பார்ப்பவர்கள் என்று கூட நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.ஒரு வேலை செய்தால் நம் பெயர் சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு செயலாற்றுபவர்களே இந்த சமூகத்தில் வெற்றியினை பெறுகிறார்கள்.

selfconfidence series ...manase...manase. 14..


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             தனித்துவம் இருக்கணும் 

ஒரு வேலை செய்தால் அதில் நம் பெயரைச்சொல்லும் அளவிற்கு தனித்துவம் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் செய்த வேலையானது மற்றவர்களைவிட நம்மை வேறுபடுத்திக்காட்டும். இதுபோல்தாங்க...மாணவ, மாணவிகளும், எல்லோரும் போல் கேள்விக்கு பதில் எழுதுவது சரி இல்லை. அந்த கேள்வியோடு சம்பந்தப்பட்ட ஒரு சில விளக்கங்களை நீங்கள் கூடுதலாக எழுதினால் நீங்கள்தான் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டவராக கருதப்படுவீர்கள். உங்களுக்கு ஸ்பெஷல் மதிப்பெண்கள் கிடைக்கும்... எனவே எப்போதுமே நாம் எந்த வேலை செய்தாலும் கருத்தோடு செய்தால் அதாவது கடமையோடு செய்தால் அது வெற்றிதாங்க. தனித்தன்மையை உருவாக்கிக்கொள்ள முயலுங்கள்.

அதுவே ஏனோ தானோ  என்று செய்தீர்களானால் அது தோல்வியில்தாங்க முடியும்.. விருப்பமில்லாமல் செய்யும் எந்த வேலையும் வாழ்க்கையில் சிறக்காது. விருப்பம் என்பது ஒன்றின் மீதான பற்றுதல். பற்றுதல் இல்லையென்றால் கொடி கூட படர முடியாது. இதை நினைவில் கொள்ளுங்கள்.. பற்றுதல் என்பதன் மறுபெயர்தான் அர்ப்பணிப்பு. அர்ப்பணிப்பு  என்பது அவசியம் தேவையான ஒன்று... அதுதான் நம்மை செயலாற்ற வைக்கும்..அந்த எண்ணத்தோடு வேலைகளை செய்யப்  பழகுங்கள்... அப்புறம் நீங்களாகவே மாறிவிடுவீர்கள்.

கடமைக்கு செய்தால் தோல்வி..!

கடமையோடு செய்தால் எப்போதும் வெற்றிதாங்க...!  எது உங்களுக்குக்கானது என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்..!

(இன்னும் வளரும்...)


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News