வாழ நினைத்தால் வாழலாம்... வழியா இல்லை பூமியில்...... படிச்சு பாருங்க...

selfconfidence series....manase...manase....19 வாழ்க்கையில் லட்சியம், கொள்கையோடு வாழ்ந்தாதாங்க ஒருபிடிப்புஇருக்கும். வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு.. படிச்சு பாருங்க... மனசுதான் மாத்திக்கணும்....;

Update: 2022-11-18 07:41 GMT

ஓடு...ஓடு.... ஓடிக்கொண்டேயிரு...உன் இலக்கை அடையும் வரை....நிற்காதே...சோர்ந்துவிடுவாய்

selfconfidence series....manase...manase....19

நம்முடைய வாழ்க்கையில் வெற்றி தோல்விகள் என்பதை சகஜமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். இறைவனின் படைப்பில் நாம் அனைவரும் ஒன்றே. ஆனால் நாம் வாழும் சுற்றுப்புறச்சூழ்நிலை , கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகள்தான் நம்மை இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டும் காரணிகளாக விளங்குகிறது. அந்த வகையில் வாழ்க்கையில் கஷ்டம் என்று வந்துவிட்டால் ஒருசிலர் இந்த விலை மதிக்க முடியாத உயிரினை மாய்த்துக்கொள்கின்றனர். அதுவும் குடும்பத்தோடு இது என்ன கொடுமை சார் இது.

selfconfidence series....manase...manase....19


selfconfidence series....manase...manase....19

வரலாற்று நிகழ்வுகளைப் படித்து பார்த்தீர்கள் என்றால் பலரின் சோதனைகள் சாதனைகளாக மாறிய கதைகள் உண்டு. ஏன் அவ்வளவு போகிறீர்கள்? இன்று இந்தியாவில், தமிழ்நாட்டில் உள்ள விவிஐபிக்கள் அதாவது நான் சொல்வது தொழிலதிபதிர்கள், முன்னனி வணிக நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆகியோரிடம் கேட்டு பாருங்களேன் அவர்களுடைய சுயசரிதைக் கதையை. அதைவிடவா நாம் கஷ்டப்படுகிறோம்? என்று உங்களுக்கே எண்ணத்தோன்றும். அந்த வகையில் கஷ்டப்படாமல் அவர்கள் எல்லாம் வாழ்க்கையில் முன்னுக்கு வரவில்லை.

selfconfidence series....manase...manase....19


selfconfidence series....manase...manase....19

ஒரு சிலர் தான் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்தாலும் தான் பட்ட கஷ்டத்தினை மற்றவர்கள் அறியும் வகையில் வெளிப்படையாக மிகத் தெளிவாக மேடையில் சொல்வார்கள். அது மற்றவர்களுக்கு ஒரு ஊக்கசக்தியாக இருக்கும். ஆனால் ஒரு சிலரோ தான் வந்த தடம் எது என்று தெரியக்கூடாது என வாழ்வார்கள், வாழ்கிறார்கள்... அது அவரவர்களுடைய விருப்பம் அதில் நாம் தலையிடக்கூடாது.

பள்ளி,கல்லுாரி மாணவர்களுக்கு....

நாம் அளித்துள்ள தலைப்பினை ஒவ்வொருவரும் நீங்கள் பல முறை படித்து பாருங்கள்...உங்களுக்குள்ளே ஒரு தன்னம்பிக்கை பிறக்கும்...காரணம் ஒன்று கிடைக்காவிட்டால் மற்றொன்றுக்கு மாறிவிடவேண்டியதுதான். அதாவது ஒரு பாடத்தில் நீங்கள் சேரவேண்டும் என நினைக்கிறீர்கள்? அது கிடைக்காவிட்டால் மற்றொரு பாடத்தினை சாய்ஸாக வைத்து சேர்ந்து விடவேண்டும்.காலத்தினை வீணடிக்க கூடாது.

selfconfidence series....manase...manase....19


selfconfidence series....manase...manase....19

அதேபோல் நீட்தேர்வுக்காக பலர் தனியார் கோச்சிங் சென்டரில் சேர்ந்து படிப்பது, அல்லது அவர்களாகவே வீட்டில் படிப்பது என இருக்கின்றனர். இவர்கள் நீட் தேர்வில் ஒரு இரண்டு முறைக்கு மேல் நம்மால் மதிப்பெண் வாங்க முடியாத பட்சத்தில் வேறு சாய்ஸ் ஒரு கோர்ஸினை வைத்துக்கொள்ளுங்கள். சாதாரண பட்டப்படிப்பு படித்துவிட்டு போட்டித்தேர்வுகளை எழுதினால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவீர்கள். அதற்கு செல்லலாமே? . எல்லோரும் டாக்டராக முடியுமா? அதேபோல் எல்லோருக்கும் அரசு வேலை என்பது கிடைக்காத காரியம். காரணம் அதில் போட்டிகள் அதிகம். வேலைகளின் எண்ணிக்கை குறைவு.

ஒரு குறிப்பிட்டகால நிர்ணயத்தினை வரையறை செய்துகொண்டு அது வரை போட்டித்தேர்வுகள் ,நீட் தேர்வு எழுதி முயற்சிக்கலாம். அந்த கால எல்லைக்குள் நாம் தேர்ச்சி பெறாவிட்டால் மாற்று வழியினை நாடிவிடவேண்டியதுதான். இல்லாவிட்டால் காலம்தான் விரயமாகும். காற்றுள்ளபோதே துாற்றிக்கொள் என்பது போல் வயதுள்ளபோதே ஒரு நிலையான வேலையையோ அல்லது தொழிலையோ தேடிக்கொள்ள வேண்டும்.

selfconfidence series....manase...manase....19


selfconfidence series....manase...manase....19

காலமும் நேரமும் நமக்காக காத்திருக்காது என்பதை அனைவருமே நினைவில் கொள்ளுங்கள். இந்த உலகமானது பரந்துவிரிந்தது. எங்கு வேண்டுமானாலும் நாம் செல்லலாம். அதற்குரிய கட்டுப்பாட்டு விதிமுறைகளோடு. பொய்சொல்லக்கூடாது, திருடக்கூடாது, மற்றவர்கள் பிரச்னை மற்றும் வாழ்வில் தலையிடக்கூடாது இந்த 3 தாரக மந்திரத்தினை உங்கள் வாழ்வில் பின்பற்றுங்கள்... தானாகவே உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவீர்கள். எங்கும் என்றும் எப்போதும் நேர்மைக்கு உரிய மரியாதை உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நேர்மையாக இருப்பவர்களுக்கு பலவிதத்திலும் துன்பங்கள் வரும், வரலாம். ஆனால் அவைஎல்லாம் பனிபோல்விலகிவிடும். எனவே வாழ்வதற்கு இவ்வுலகில் ஆயிரம் வழிகள் உள்ளன. உன்னை நீ நம்பு. தன்னம்பிக்கையை எந்த நேரத்திலும் கைவிடாதிரு. உன் வாழ்க்கை உன் கையில்தான்.

selfconfidence series....manase...manase....19


selfconfidence series....manase...manase....19

ஆசையே துன்பத்துக்கு காரணம்

வாழ நினைத்தால் வாழலாம்.. வழியா இல்லை பூமியில் என்பது உழைப்பவர்களுக்கு சொல்லப்பட்ட செய்தி. குறுக்கு வழிகள் ஆயிரம் உண்டு. அது சரிப்படாது.உண்மையாக உழைப்பவர்கள் அனைவருமே வாழ்வில் முன்னேற காலதாமதமாகும். ஆனால் நிச்சயம் முன்னேறிக்காட்டுவார்கள். காரணம் அவர்களுடைய பரிபூரண உழைப்பு. தயவு செய்து கம்பேர் செய்து வாழாதீர்கள். பக்கத்துவீட்டு, எதிர்த்த வீடு, அப்படி உள்ளனர், இப்படி உள்ளனர் உங்கள் வருமானத்திற்கு தகுந்த வாழ்க்கை எளிமையானதாக இருந்தாலும் வாழக்கற்றுக்கொள்ளுங்கள்.

selfconfidence series....manase...manase....19


selfconfidence series....manase...manase....19

கடன் வாங்கி விடாதீர்கள். தேவை என்றால் மட்டுமே வாங்க வேண்டுமே தவிர பொருட்களை கடனுக்கு வாங்கி நிரப்புவது என்பது என்று இருந்தாலும் நமக்கு ஆபத்தே. எனவே அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் என்ன தெரியுமா? இருப்பதை வைத்து வாழப்பழகுங்கள்... உங்கள் சந்ததியினருக்கும் இதனை தெரிவித்துவிடுங்கள்...கடன் என்பது தீராத நோய்... வட்டியே ஆளை விழுங்கிவிடும்... சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும் நிறுவனங்கள் அதனை கட்டாதபோது உரிய மரியாதையை தருவதில்லை.. . என்று நினைவில் கொண்டு ஆசையை தவிர்த்துவிடுங்க.. கையில் காசு இருந்தால் பொருளுக்கு ஆசைப்படுங்க....

selfconfidence series....manase...manase....19


selfconfidence series....manase...manase....19

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ...நம் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை இவ்வுலகில். அந்த அளவிற்கு பரந்து விரிந்த உலகில் அனைத்து இடத்திலும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். சரிங்க...எல்லோரும் படித்தவர்களா? அப்படியில்லை...ஒருசில இடங்களில் படித்தவர்கள் வேலை பார்க்க சென்றுள்ளனர். ஆனால் பலர் பல ஆண்டுகளுக்கு முன்பு வியாபாரம் செய்ய கடை வைக்க சென்று அங்கேயே நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர். பெரும்பாலும் இதில் ஹோட்டல் கடை தான் அடங்கும்...அவ்வளவும் அவர்களுடைய தன்னம்பிக்கை தான் காரணம்... படிப்பு கூட அவர்களுக்கு அவ்வளவாக இல்லை.. உழைப்பை நம்பி களம் இறங்கியவர்கள் இன்று உலகம் முழுக்க தமிழர்கள்... இதுதாங்க வாழ்க்கை...

முயற்சி செய்பவனுக்கு முழங்கால் அளவுதான் சமுத்திரம்....முயற்சியுங்கள்...தன்னம்பிக்கையோடு..

வாழநினைத்தால் வாழலாம்... வழியா இல்லை பூமியில்...எத்தனையோ வழிகள் உண்டு..

(இன்னும் வளரும்)

Tags:    

Similar News