தடைகளைத் தகர்த்தெறியுங்க..! தொடர் முயற்சி மட்டுமே முன்னேற்ற பாதையமைக்கும்..!
Self Confidence in Tamil-வாழ்க்கையில் நமக்கு முன்னேறும் போது தடைகள் வந்தாலும் மனம் தளரக்கூடாதுங்க... அதைத் தகர்த்தெறிந்துவிட்டு தொடர்ந்து முயற்சிக்கணுங்க...பிறகென்ன வெற்றிதான்...;
Self Confidence in Tamil
Self Confidence in Tamil
மனித வாழ்க்கை என்பது மகத்தானது. ஆனால் ஒருசிலர் திட்டமிட்டு வாழாமல் வாழ்க்கையை குறை சொல்வதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இறைவனின் படைப்பில் அனைவரும் பிறக்கும்போது ஒரே மாதிரியாகத்தான் பிறக்கிறோம். ஆனால் வளர்ப்பு சூழ்நிலையினால்தான் நாம் மாறுபட்டுவிடுகிறோம். மற்றபடி எல்லோருக்கும் ஒரே மாதிரியான உறுப்புகளைத்தான் இறைவன் அளிக்கிறான். ஆனால் ஏன் வேறுபடுகிறோம்? என்றாவது யாராவது நினைத்து பார்த்துள்ளீர்களா?
நாம் சொல்வது சமுதாயத்தில் நாம் வேறுபடுவது வேறு. ஆனால் ஒரே குடும்பத்தில் பிறப்பவர்களிலேயே வித்தியாசம் வருகிறதே ஏன்? உதாரணத்திற்கு ஒரே குடும்பத்தில் 4 ஆண் பிள்ளைகள் பிறந்திருந்தால் அதில் 2 பேர் உயர்ந்த அதிகாரிகளாகவும், ஒருவர் விவசாயியாகவும், மற்றொருவர் சொந்த தொழில் செய்பவராகவும் உள்ளனரே இந்த வித்தியாசம் எப்படி வந்தது? அனைவரையும் ஒரு சேரத்தான் வளர்த்திருப்பார்கள் அவரது பெற்றோர்கள். காரணம் என்ன தெரியுமா? ... தனிப்பட்ட முயற்சிதாங்க அவர்களை முன்னேற்றமடையச்செய்துள்ளது. உயர்ந்த அதிகாரிகளானவர்கள் எடுத்த தனிப்பட்ட முயற்சியின் விளைவே அந்த பதவி . மற்ற இருவரும் அந்த அளவுக்கு முயலாததால் அவர்கள் செய்த முயற்சிக்கு கிடைத்தவை அவை.
ஆக இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் தெரியுமா? நாம் எந்த அளவுக்கு வாழ்க்கையில் முயற்சி செய்கிறோமோ? அந்த அளவுக்குஉச்சத்தினை அடைகிறோம். முயற்சி இல்லாவிட்டால் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லைங்க... எந்தவொரு விஷயத்துக்கும் உங்கள் மனது சரின்னு சொல்லணும் பின்னர் தான் முயற்சிக்க முடியும். ஆக உங்க மனநிலையை நல்ல நிலையில் வைத்திருந்தால் எந்தவொரு செயலும் சிறக்கும் இதுதான் அடிப்படை . குழப்பமான மனநிலையில் நீங்கள் உள்ள போது எந்தவொரு முடிவையும் எடுக்காதீங்க.. அது வெற்றியைத் தராது. நல்ல தெளிவாக உள்ளபோது எடுக்கும்முடிவுகளே வெற்றியைத்தரும்.
Self Confidence in Tamil
Self Confidence in Tamil
முயற்சி இல்லாதவர்களுடைய வாழ்க்கையானது கூரை இல்லாத வீடு போன்றது. எந்த நேரத்திலும் அவர்களுக்கு ஆபத்து காத்திருக்கும்...பயந்து கொண்டே வாழவேண்டிய சூழ்நிலையில்தான் அவர்களுடைய வாழ்க்கையானது அமையும். அதுவே நன்கு முயற்சித்தவர்களைப் பாருங்கள். வசதி, வாய்ப்பு, கார், பங்களா என நல்ல சூழ்நிலையில் நல்லதொரு நிலையினை வாழ்வில் அடைந்திருப்பார்கள்.
இதுபோன்று முயற்சி செய்யும் போது முட்டுக்கட்டைகளாக நமக்கு பல தடைகள் வரும். அதனையெல்லாம் தகர்த்தெறிந்து விட்டு வாழ்க்கையின் செயல்பாடுகளை முடுக்கிவிடவேண்டும். அப்போதுதான் வாழ்வில் வளர்ச்சி கிட்டும். அதனை விடுத்து தடைகள் வந்து விட்டதே என தயங்கினீர்கள் என்றால் கண்டிப்பாக எதுவும் சக்ஸஸ் ஆகாது. தோல்விதான். எதனைப்பற்றியும் கவலைப்படாமல் நாம் திட்டமிட்டுக்கொண்டே நம் செயல்பாடுகளை தொடர்ந்து செய்துகொண்டேஇருக்க வேண்டும். தடைகள் என்பதில் பல வகைஉள்ளது. இயற்கையாகவே வருவது, இடையூறினால் வருவது,எதிரிகளால் வருவது, என பலவித தடைகள் உண்டு. அவ்வளவையும் நாம் எதிர்நோக்கும் வலிமை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அதனை தகர்த்தெறிய முடியும். தயங்கி நின்றாலோ மூலையில் முடங்கினாலோ வெற்றிக்கனி எதிர்ப்பக்கம் சென்றுவிடும். வெற்றியோ, தோல்வியோ யாருக்காகவும் காத்திருப்பதில்லை... வரும்போது கண்டிப்பாக வரும்.. யார் தடுத்தாலும்... ஆகையால் முயற்சிஎன்பது நிறுத்தாமல் தொடர்ந்து செய்துகொண்டேயிருக்கும் பட்சத்தில் தொடர் தோல்வியே அடைந்திருந்தாலும் ஒரு முறையில்வெற்றியைத் தந்தாக வேண்டும்... எனவே யாருமே முயற்சியை மட்டும் கைவிட்டுவிடாதீங்க... தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருங்கள்.... வெற்றி கிட்டும்... வெகுசுலபமாக....
Self Confidence in Tamil
Self Confidence in Tamil
ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எந்த வித முயற்சியும் மேற்கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்கள் வாழ்வில் வளர்ச்சியே இருக்க வாய்ப்பில்லை. கோடீஸ்வரர்கள் கூட யாரும் இக்காலத்தில் சும்மா இருப்பதில்லை. ஏதாவது ஒரு தொழிலைச் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். நீங்கள் உழைக்காவிட்டால் சோம்பேறித்தனம் உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும். இதனால்தான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் இந்த சோம்பேறித்தனத்தினை உண்டாக்கிவிடக்கூடாது என்ற பயத்தில்தான் ஒரு சில தொழில்களை அவர்கள் செய்து வருகின்றனர்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பார்த்திருப்பீர்கள் . அரசு வேலையில் இருந்துவிட்டு ரிட்டயர்டு ஆனவுடன் அவர்கள் உடல் ஆரோக்யம் பாதிக்க துவங்கிவிடுகிறது. அதிலும் ஒருசிலர் இருக்கிறார்கள். இன்று ரிட்டயர்டு ஆகிறாரா நாளை வேறு ஒரு இடத்தில் நல்ல வேலைக்கு சேர்ந்துவிடுவார். அதாவது அவர் ரிட்டயர்டு ஆகிறோம் என்பதை தெரிந்ததால் முன்னெச்செரிக்யைாக முயற்சி மேற்கொண்டுள்ளார். இதனால் நண்பர்களின் சிபாரிசில் ஒரு வேலையையும் தேடிக்கொள்வார்.
Self Confidence in Tamil
Self Confidence in Tamil
வசதி வாய்ப்புகள் இருந்தாலும் நம்மால் மூன்றுவேளையும் சாப்பிட்டு சாப்பிட்டுதுாங்க முடியாது. ஒன்று மட்டும் புரிந்துகொள்ளுங்கள் அ னைவருமே... ஓடும் நீரில் குளித்தால் உங்கள் உடம்புக்கு எதுவும் ஆகாதுங்க... அதுவே தேங்கும் நீரில் குளித்து பாருங்கள் உங்களுக்கு விஷயம் தெரியும். எனவே முடிந்த வரை எங்கும் தேங்கி விடாதீர்கள்...அது ஆபத்தைத்தான் விளைவிக்கும். எப்படியாவது முயற்சி செய்து தனியார் துறையில் வேலை வாங்கிவிட்டால் உயிர் உள்ளவரை நமக்கும் பொழுது ஒரு பக்கம் போகும் அதற்கேற்ற வருமானமும் வரும். எனவே இதுபோல் ரிட்டயர்ட்மென்ட் தேதி நெருங்குபவர்கள் அ னைவருமே முதலிலேயே ஒரு வேலையை ரெடி செய்து கொள்வதால் அவர்களுடைய ஆயுள் நீட்டிக்கப்படுகிறது. இல்லாவிட்டால் காலை எழுந்தவுடன் ஆபீஸ் பிறகு மாலைதான் வீடு என்றிருந்தவருக்கு தற்போது நாள் முழுக்க வீட்டிலேயே அடைந்து கிடக்க முடியுமா? சற்று யோசித்து பாருங்கள்- அப்படி ஒருநிலை ஏற்பட்டால் தாழ்வு மனப்பான்மையால் அவர் உடல் ஆரோக்யம் பாதிப்பு ஏற்பட கண்டிப்பாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
Self Confidence in Tamil
Self Confidence in Tamil
எனவே யாராக இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் உங்களுடைய முயற்சியை மட்டும் எந்த செயலுக்கும் செய்யாமல் இருந்துவிட்டால் அது ஆபத்தில்தான் முடியும். தொடர் முயற்சி உடையவர்களே வாழ்க்கையில் ஜெயிக்கின்றனர். அத்தகைய முயற்சி இல்லாதோர் முடங்கிப்போய் நோயால் பாதிப்படைந்து தங்கள் ஆரோக்யத்தினை இழந்துவிடுகின்றனர்.... எனவே முயற்சி செய்து கொண்டேயிருங்கள்... ஒரு கட்டத்தில் உங்களை யார் என்று சொல்லும் அந்த முயற்சி... பாருங்க...
(இன்னும் வளரும்)
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2