மனசே...மனசே... தன்னம்பிக்கை தொடர் -5 வாழ்க்கைக்கு லட்சியம், கொள்கை தேவை

self confidence- மனித வாழ்க்கை என்பது மகத்தானது.வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்ற லட்சியம், கொள்கைகளை வகுத்துக்கொள்ள வேண்டும். லட்சியமில்லா வாழ்க்கை கூரையில்லா வீடு போன்றது.

Update: 2022-08-11 04:36 GMT

self confidence -லட்சியம், கொள்கைக்கான மாதிரி படம்.

life needs goal and principle-வாழ்க்கை என்பது சாதாரணமானது அல்ல. அனுபவம் மிக்கவர்களை கேட்டு பார்த்தீர்களானால் வாழ்க்கை என்பது எவ்வளவு பொறுப்பு மிக்கது என இக்கால இளையோர்களுக்கு பாடம் நடத்தி விடுவர். அந்த அளவிற்கு வாழ்க்கை என்பது நமக்கு அனுபவங்களை கற்றுத் தரும் பள்ளி என்று கூட சொல்லலாம்.

நாம் வாழும் வாழ்க்கையில் இதுவரை கடந்த வந்த ஆண்டுகளை தயவு செய்து அசை போட்டு பாருங்கள். ஒவ்வொரு நாளும் நாம்புதுப் புது அனுபவங்களை கற்று இருப்போம். அது சிறிய வயது, பெரிய வயது என்பது அல்ல. அந்தந்த வயதினருக்கு ஏற்ற அனுபவங்கள் நிச்சயம் கிடைத்திருக்கும். நம்மை ஆளாக்குவது நாம் பெற்ற அனுபவங்களே. அனுபவங்கள் நமக்கு வாழ்வின் ஏதாவது ஒரு தருணத்தில் கைகொடுக்க கூடியதாகவே இருக்கும்


லட்சியம் இல்லா வாழ்வு கூரையில்லா வீடு

life will need goal and principle மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவருக்கும் அவசியம் தேவை லட்சியம் தேவை. இந்த லட்சியம்தான் நம்மை சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாக்கும். லட்சியம் இல்லாத வாழ்க்கை கூரை இல்லாத வீடு போன்றது. ஏதோஇறைவன் நம்மை படைத்தான் என தினந்தோறும் உழைக்காமல் வெந்ததை தின்று நாட்களை கடத்துவது வாழ்க்கையல்ல.

நாம் ஒவ்வொருவருமே பிறந்தது முதல் இறப்பு வரை தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டேயிருக்க வேண்டும். பணவசதி படைத்தவர்கள் இன்றும் அவர்களுடைய பிசினஸ், தொழில்களை நடத்திக்கொண்டேதான்இருக்கின்றனர். வாழ்க்கைக்கு தேவைான பணம் அவர்களிடம் இருந்தும் அவர்கள் ஏன் உழைக்கின்றனர். பணம் சேர்க்கவா? இல்லை அவர்களின் உள்ளத்தில் ஒரு லட்சியம் கண்டிப்பாக இருக்கும். அதனை அடையும் வரை அவர்கள் உழைத்துக்கொண்டேயிருப்பார்கள். அதுதான் வாழ்க்கை.

எந்தவித சிந்தனையும் இல்லாமல் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் நாட்களை கடத்துவது வாழ்க்கையல்ல. வாழ்க்கை என்றால் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் லட்சிய தீ இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுடைய லட்சியத்தை அடைய முடியும். லட்சியத்தை அடைய வேண்டுமென்றால் உங்களை நீங்களே முதலில் நம்ப வேண்டும்.நம்பிக்கைதான் வாழ்க்கையே. உங்களை நீங்களே நம்பா விட்டால் வேறு யார் நம்புவார்கள். எனவே முன்னேறுபவனுக்கு முழங்கால் அளவுதான்சமுத்திரம் என்பது போல் இறங்கி பார்த்துவிட வேண்டியதுதான். கொள்கையும் லட்சியமும் இல்லாத வாழ்க்கை வாழ்பவர்கள் இருந்தும் பிரயோசனமில்லா நிலைதான்.

Full View

ஓடிக்கொண்டேயிருங்க..

life  needs goal and principle-       இயற்கையின் படைப்பில் பார்த்தீர்களானால் ஆறு என்றாவது நின்று விடுகிறதா? கடல் அலை எப்போதாவது நிற்கிறதா? சூரியனும்,நிலவும் வராமல் இருக்கிறதா? அதுபோலவே நம் உடல் உறுப்புகள் ஏதாவது வேலை செய்யாமல் இருக்கிறதா? நினைத்து பாருங்கள் .ஏதாவது உறுப்பு சோம்பி கிடக்கிறதா? யாரைப்பற்றியும் கவலைப்படாமல் இயற்கையின் படைப்பில் அனைத்தும் அதனதன் வேலைகளை செய்து வருகிறது. அதுபோல் நாம் நம்மை பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும். எதிர்மறை எண்ணம் கொண்டவர்களிடம் இருந்து விலகியே இருங்க... எப்போதும் நேர்மறை எண்ணம் கொண்டவர்களுடன் பழகுங்கள். விரக்தியாக பேசுபவரின் அருகில் கூட நிற்காதீர்கள். இவைகள்தான் உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளே.

எனவே யாரையும் எதிர்பாராமல் எப்படி ஆற்றுநீர் ஓடிக்கொண்டேயிருக்கிறதோஅதுபோல் நீங்களும் தினமும் ஏதாவது ஒரு வேலையினை செய்ய ஓடிக்கொண்டேயிருங்கள். ஓரிடத்தில் தேங்கிவிட்டால் உங்களுக்கு சோம்பல் அதிகரித்துவிடும்.மூளை வேலை செய்யாது. நோய்கள் உருவாகும். அதுவே ஓடிக்கொண்டேயிருங்கள் உங்களுடைய மூளையானது சுறுசுறுப்பாகவே இயங்கும். பல வித முன்னேற்ற சிந்தனைகள் மேலோங்கும். முடிந்தவரை தனிமையை தவிருங்கள்.

மனதிற்கு அழகான இசையை அவ்வப்போது கேளுங்க. கொள்கை, லட்சியம் என்பதை ஒவ்வொருவரும் டைரியில் தேதி போட்டு குறித்து வையுங்கள். அந்த தேதிக்குள் உங்கள் லட்சியத்தினை அடைய தேவையான முழு முயற்சிகளில் இறங்குங்கள். நிச்சயம் வெற்றிதான்.... லட்சியமே வாழ்க்கை... லட்சியம் இல்லாதவர்களுக்கு லட்சங்கள் நிச்சயமாக கிடைக்காது என்பதை உணருங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே....

(இன்னும் வளரும்...)

Tags:    

Similar News