மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் Scientific Officer பணிகள்

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் இயங்கும், மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் Scientific Officer பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

Update: 2021-07-18 03:14 GMT

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் இயங்கும், மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் Scientific Officer பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

அதன் விபரங்களவான :

நிறுவனம் : பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)

பணியின் பெயர்: Scientific Officer (Group-A)

சம்பளம் : ரூ.56,100/-

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பொறியியல் பாடப்பிரிவில் குறைந்தது 60% மதிப்பெண்ணுடன் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Physics/ Applied Physics, Chemistry, Bio Sciences/ Geology/ Applied Geology/ Applied Geochemistry / Food Technology பாடப்பிரிவுகளில் எதாவது ஒன்றில் M.Sc/ M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

GATE -2020 அல்லது GATE -2021 நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

GATE – தேர்வு எழுதாதவர்கள் பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் (BARC) நடத்தப்படும் நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு செப்டம்பர் -2021 ல் நடைபெறும் . பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அக்டோபர் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் Trainee Scientific Officer ஆக பணியில் சேர்க்கப்படுவார். தேவையான பயிற்சிகாலம் முடிந்ததும் Scientific Officer ஆக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.barconlineexam.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை கவனமாக படித்து,   ஆன்லைன் மூலமாக 9-8-2021 க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

Tags:    

Similar News