தமிழக நீதிமன்றங்களில் 3557 பணியிடங்கள்

தமிழ் நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பணிகளுக்கு 3557 காலியிடங்கள் உள்ளன, ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

Update: 2021-07-06 03:27 GMT

பணியிடம் : தமிழக முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் 

பணியின்  பெயர் மற்றும் காலியிட விபரங்கள் :

1.Office Assistance – 1911

2.Office Assistance cum Full time Watchman -1

3.Copyist Attender -3

4.Sanitary Worker -110

5.Scavenger – 06

6. .Scavenger/ Sweeper  -17

7. Scavenger/ Sanitary Worker -1

8.Gardener – 28

9. Watchman -496

10. Night Watchman – 185

11. Night Watchman cum Masalchi – 108

12. Watchman cum Masalchi – 15

13. Sweeper – 189

14. Sweeper/ Scavenger – 1

15. Watchman & waterwomen – 1

16. Masalchi – 485

Total - 3557

( Notification No: 59/2021)

சம்பளம்:  மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் மாதம் ரூ.15,700 - 50,000

வயது வரம்பு : குறைந்த பட்சம்  18  வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்,  SC/ST/SCA பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் 35வயதிற்குள் இருக்க வேண்டும். MBC/BC/BCM பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது வரம்பு 1.7.2021 தேதியின் படி கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி : Office Assistance, Copyist Attender பணிகளுக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும், இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிப்பது விரும்பத்தக்கது. இதர பணிகளுக்கு தமிழ் நன்றாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

சென்னை உயர் நீதி மன்றத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, தொழில் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :

BC/ MBC / DC மற்றும் பொதுப் பிரிவினர்கள் ரூ.500 விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ST/SCA பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் 9.7.2021 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விபரங்களை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள். தேர்வுக்கான அனுமதி சீட்டை பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்யுங்கள் . தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Tags:    

Similar News