ஆன்லைனில் பான்கார்டு வாங்க ஈசியா எப்படி விண்ணப்பிக்கலாம்?
Pan Card Apply Online in Tamil - அத்தியாவசியமான ஆவணங்களில் ஒன்றான பான் கார்டு வாங்க எப்படி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என வாருங்கள் பார்க்கலாம்.
Pan Card Apply Online in Tamil - இப்போதெல்லாம் பான் கார்டு என்பது அத்தியாவசியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. வங்கி கணக்கு தொடங்க, வங்கி பரிவர்த்தனை, வருமான வரி தாக்கல், அடையாள சான்று, வீடு நிலம் வாங்குதல் போன்ற முக்கிய பரிவர்த்தனைகளின் போது இன்றியமையாத ஆவணங்களில் ஒன்றாகவும் உள்ளது.
ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
முன்பெல்லாம் பான் கார்டு வாங்க வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று, பல மணி நேரம் காத்திருந்து விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இன்று அப்படியில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் எளிதில் விண்ணப்பிக்கலாம்.
அதெல்லாம் சரி, பான் கார்டினை விண்ணப்பிக்க உங்களிடம் என்னென்ன ஆவணங்கள் தேவை.
- ஆதார் கார்டு
- வாக்காளர் அடையாள அட்டை
- பாஸ்போர்ட்
- வாகன ஓட்டுனர் உரிமம்
- போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக்
- மின்சார கட்டண ரசீது,
- கேஸ் பில்,
- கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட்,
- வங்கி கணக்கு ஸ்டேட்மெண்ட்
Pan card apply online in Tamil இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும். இவற்றோடு பிறந்த தேதி சான்றுக்காக பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி சான்றிதழ் தேவை. ஒரு வேளை மேற்கூறிய சான்றுகள் இல்லாவிட்டால், கெஜட்டட் ஆபீசர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படும்.
NSDLல் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைனில் பான் கார்டுக்காக விண்ணப்பிக்க https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
அதில் முதல் காலத்தில் அப்பிளிகேஷன் டைப் என இருக்கும். அதில் புதியதாக பான் அப்ளை அல்லது கரெக்சன் என கொடுக்க வேண்டும்.
இதில் இந்திய குடிமகனா 49A அல்லது foreign citizen form 49AA என்பதை கிளிக் செய்யவும்.
இதனையடுத்து என்ன Category என்பதை கொடுக்கவும். அதாவது தனி நபரா அல்லது நிறுவனமா, டிரஸ்டா என்பதை கொடுக்க வேண்டும். அதன் பிறகு டைட்டில் கொடுத்து உங்களது உங்களது last name/sur name என்பதில் உங்களது பெயரை பதிவிடவும்.
அதனையடுத்து உங்களது பிறந்த தேதி, இமெயில் ஐடி, மொபைல் எண் என சரியாக கொடுக்கவும்.
அதன் பிறகு கேப்ட்சா கோடு இருக்கும். அதனை சரியாக பதிவிடவும். நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியானதா என பார்த்து சப்மிட் கொடுக்கவும். சப்மிட் கொடுத்த பிறகு உங்களுக்கு இன்னொரு ஸ்கீரின் தோன்றும். அதில் உங்களது டோக்கன் நம்பர் இருக்கும். அதன் குறித்து வைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
Pan card apply online in Tamil கேஒய்சி ஆப்சன்கள்
அதன் பிறகு continue with pan application form என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அது வேறொரு பக்கத்திற்கு செல்லும். அதில் மூன்று ஆப்சன்கள் இருக்கும்.
ஒன்று டிஜிட்டல் கேஒய்சி, E-sign இருக்கும்.
இரண்டாவது ஆப்சன். Submit scanned images through e sign என இருக்கும்.
மூன்றாவது ஆப்சன் forward application documents physically
இதில் இரண்டாது ஆப்சனை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதன் கீழ் பிசிகல் பான் தேவையா என்ற ஆப்சன் இருக்கும். அதில் yes என கொடுத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு ஆதாரில் உள்ள கடைசி நான்கு இலக்க எண்ணினை கேட்கும். அதனை பதிவிடவும்.
அதன் பிறகு ஆதாரில் உள்ளது போலவே பெயரை கொடுக்கவும். அதன் பிறகு gender கொடுத்து, உங்களுக்கு வேறு ஏதேனும் பெயர் இருந்தால் அதனை கொடுக்கவும்.
அதன் பிறகு அப்பாவுடைய பெயர் கேட்கும். அதனை கொடுத்த பிறகு source of income என கேட்கும். அதில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு உங்களது வீட்டு முகவரியை சரியாக முழுமையாக சரியாக கொடுக்கவும். அதன் பிறகு மொபைல் நம்பர், மெயில் ஐடி கொடுக்கவும். அதன் பிறகு representative assessee என்று கேட்கும். அதில் No என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு Next என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
இது அடுத்த பக்கத்திற்கு செல்லும். அதில் AO detail கேட்கும். அதில் உள்ள பாக்சில் இருந்து உங்களுக்கு தேவையான விவரங்களை எடுத்து பூர்த்தி செய்து கொள்ளலாம். அதன் பிறகு next என்ற ஆப்சனை கொடுக்கவும். இது அடுத்த பக்கத்திற்கு செல்லும்.
Pan card apply online in Tamil அடுத்த பக்கத்தில் ஆவணங்கள் விவரங்கள் கொடுக்கவும்.
Proof of address என்ற ஆப்சனுக்கு எதை கொடுக்க போகிறீர்களோ அதனை கிளிக் செய்யவும். உதாரணத்திற்கு ஆதார் கார்டினை கொடுக்க போகிறீர்கள் எனில் ஆதார் கார்டு என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து பிறந்த தேதிக்கு என்ன ஆவணம் கொடுக்க போகிறீர்கள் என்பதை கேட்கும். அதிலும் ஆதார் அல்லது வேறு என்ன ஆவணம் கொடுக்க போகிறீர்களோ அதனை கொடுக்கவும்.
declaration- ல் himself/herself என கேட்கும்.
நீங்கள் எங்கிருந்து பான் அப்ளை செய்கிறீர்கள் என்பதை கேட்கும். அதனை கொடுத்து தேதியை கொடுத்து கொள்ளவும்.
அதன் பிறகு உங்களது போட்டோ அப்லோடு செய்ய கேட்கும். அதில் உங்களது போட்டோவினை jpeg பார்மேட்டில் 200dpi பார்மேட்டில் கொடுக்கவும். பைல் சைஸ் 50 kb அளவு இருக்க வேண்டும்.
அதேபோல கையெழுத்தும் மேற்கண்ட அளவுகளில் ஸ்கேன் செய்து கொடுக்கவும்.
அதன் பிறகு சப்போர்ட்டிங் ஆவணத்தில் என்ன ஆவணம் கொடுக்க போகிறீர்களோ அதனை பிடிஎஃப்-ஆக 300 kb அளவில் கொடுக்க வேண்டும்.
இதனை கொடுத்த பிறகு சப்மிட் கொடுக்கவும். இதன் பிறகு உங்களது அப்ளிகேஷன் வெற்றிகரமாக கொடுக்கப்பட்டதாகவும், கன்பார்ம் செய்யவும் கேட்கும்.
அதற்காக உங்களது முதல் எட்டு இலக்க ஆதார் நம்பரை கேட்கும். அதனை கொடுத்து நீங்கள் கொடுத்த விவரங்கள் அனைத்தும் சரியான என்பதை பார்த்துவிட்டு proceed என்பதை கொடுக்கவும்.
அதன் பிறகு பேமெண்ட் ஆப்சன் கேட்கும். அதில் ஆன்லைனில் பேமென்ட் கொடுக்கலாம். ஆக எதனை கொடுக்க விருப்பமோ அதனை கொடுத்துக் கொள்ளலாம்.
உங்களது பேமெண்ட் successful என்றால், continue என்பதை கிளிக் செய்யவும்.
அதன்பிறகு Aadhar authentication செய்ய வேண்டும். அத்ல் authentication என்ற ஆப்சனை கிளிக் செய்தால் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். அதனை கொடுத்து சப்மிட் கொடுத்தால் acknowledgement நம்பர் வரும். அதனை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியாக கொடுத்திருந்தால், உங்களுக்கு பான் கார்டு உங்களது முகவரிக்கு கிடைக்கும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2