ITI தகுதிக்கு மேற்கு மத்திய ரயில்வேயில் ஓராண்டு அப்ரண்டிஸ் பயிற்சி: காலியிடங்கள் 2226
பயிற்சி பெறுபவர்களுக்கு ரயில்வே விதி முறைப்படி உதவித்தொகை வழங்கப்படும்.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.11.2021
இந்திய அரசின் மேற்கு மத்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தொழிற்சாலைகளில் ITI படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கபடுகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
1. பயிற்சியின் பெயர்: Trade Apprentice
மொத்த காலியிடங்கள்: 2226
வயதுவரம்பு: 15 முதல் 24-க்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும். தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி அளிக்கப்படும் டிரேடுகள் விபரம் வருமாறு:
Mechanic (Diesel), Fitter, Electrician, Carpenter, Motor Mechanic, Welder (Gas & Electric), Painter, Machinist, Turner, Wireman, Air Conditioning, Forger & Heat Treater Pump Operator, Digital Photographer, Stenographer (English & Hindi), Front Office Manager, Secretarial Assistant, Health Sanitary Inspector, Dental Lab Technician, COPA, Gardener, Florist & Landscaping, Food Production (Cooking), Health Sanitary Inspector, Horticulture.
தேர்வு செய்யப்படும் முறை:
10-ஆம் வகுப்பு மற்றும் ITI படிப்பில் பெற்றுள்ள மதிப் பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சி பெறுபவர்களுக்கு ரயில்வே விதி முறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ ST/PWD பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www. wcr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழு விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : https://wcr.indianrailways.gov.in
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.11.2021