பட்டதாரிகளுக்கு இந்திய விமானப் படையில் அதிகாரி பணிகள்
இந்திய விமானப் படையின் Technical / Non Technical பிரிவில் அதிகாரி பணிக்கு ஆண்/பெண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.;
டிகிரி படித்தவர்களுக்கு இந்திய விமானப் படையின் Technical மற்றும் Non Technical பிரிவில் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்/பெண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுபற்றிய விபரம் வருமாறு:
1. பணியின் பெயர்:
1) Permanent Commission Officer
2) Short Service Commission Officer
மொத்த காலியிடங்கள்: 317
விமான படை பிரிவு வாரியாக ஏற்பட்டுள்ள காலியிட விபரம் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பளவிகிதம்: ரூ.56,100 to 1,77,500
வயது:
1) Flying Branch: 20 முதல் 24-க்குள் இருக்க வேண்டும்.
2) Ground Duty: 20 முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய +2 பாடப்பிரிவில் படித்து தேர்ச்சி பெற்று ஏதாவதொரு அறிவியல் பாடத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு பொறியி யல் பாடத்தில் B.E/B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண் டும். பட்டப்படிப்பில் குறைந் தது 60% மதிப்பெண்கள் பெற் றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை இந்திய விமானப் படையால் நடத்தப்படும் AFCAT (Air force Common Admission Test) மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப் பட்டவர்களில் Technical Branch-க்கு தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு 74 வாரங்க ளும், Non-Technical Branch-க்கு தேர்வு செய்யப்பட்டவர்க ளுக்கு 52 வாரங்களும் பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சியானது ஹைதராபாத்திலுள்ள இந்திய விமானப்படை தளத்தில் வைத்து பயிற்சி நடத்தப்படும். பயிற்சியின்போது மாதம் ரூ.56,100 உதவித் தொகை வழங்கப்படும். விமானப் படை பயிற்சி ஜனவரி 2023 முதல் வாரம் தொடங்கும். பயிற்சியில் வெற்றி பெற்றவர்கள் விமான படையில் Flying Officer-ஆக பணியமர்த் தப்படுவர். AFCAT தேர்வில் முதன் முறையாக கலந்து கொள்ப வர்களுக்கு A/C ரயில் அல்லது பேருந்து கட்டணம் வழங்கப்படும். 25 வயதிற்கும்குறைவானவர்கள் திருமணம் செய்திருக்கக்கூடாது.
தேர்வுக் கட்டணம்
AFCAT தேர்வுக் கட்டணமாக ரூ.250 மட்டும் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும், NCC-Entry முறையின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை
www.afcat.cdac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 30.12.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக் வேண்டும்.
மேலும் முழு விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt. No: AFCAT-1/2022
காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்: https://afcat.cdac.in
இதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.