மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தில் 7900க்கும் மேற்பட்ட பணியிடங்கள்

மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தில் (Staff Selection Commission) 7900க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Update: 2021-12-29 03:38 GMT

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணயத்தில் (Staff Selection Commission (SSC)) நாடு முழுவதும்  7900க்கும் மேற்பட்ட 36 பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் கணக்காளர், SI, ஆராய்ச்சி உதவியாளர், உதவி தணிக்கை அதிகாரி, உதவி கணக்கு அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, ஜூனியர் கணக்காளர், ஆய்வாளர், உதவி கண்காணிப்பாளர், உதவியாளர், தணிக்கையாளர், வரி உள்ளிட்ட 36 பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


காலியிடங்கள்: 7900க்கும் மேற்பட்டோர்

கல்வித்தகுதி: CA, MBA, CMA, Bachelor Degree

ஊதியம்: ரூ.47,600 -1,51,100/-

வயது: 18 முதல் 30 வரை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடை நாள்: 23/01/2022 , ஞாயிறு


இந்த பணியிடங்களுக்கு தகுதியுடைவர்கள் https://ssc.nic.in/ என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_23122021.pdf என்ற முகவரியில்  தெரிந்துகொள்ளலாம்.

Tags:    

Similar News