மனசே....மனசே...தன்னம்பிக்கை தொடர் -4 எழுந்தால் வெற்றி... விழுந்தால் அனுபவம்

மனித வாழ்க்கை மகத்தானது. வாழ்வின் எல்ல நிலையிலும் நாம்வெற்றி கனியை சுவைத்துவிட முடியாது. ஒரு சில விஷயங்களில் தோல்விகளையும்ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வேண்டும்.

Update: 2022-08-04 13:05 GMT

மனித  வாழ்க்கையில் நடக்கும் செயல்கள் அனைத்துமே வெற்றி பெறவேண்டும் என எதிர்பார்ப்பது பெரும் தவறாகும். ஆனால் செயல்கள் எல்லாமே நேர்மறை சிந்தனையோடு நாம் செய்யவேண்டுமே தவிர அதன் முடிவு நம் கையில் அல்ல. நம்மால் செய்யவேண்டியதை செய்துவிட்டால் அதற்கான பலன் எளிதாக நமக்கே தெரிந்துவிடும்.

வாழ்க்கை என்பது ஒன்றும் சாதாரணமானது அல்ல. ஒவ்வொரு நாளும் நாம் பல விஷயங்களில் பல்வேறு அனுபவங்களைப் பெறுகிறோம். இதனை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு நிமிடமும் நமக்கு வாழ்வின் அனுபவங்கள்தான் . ஆனால் இந்த அனுபவங்கள் அனைத்துமே நம் வாழ்க்கையின் ஏதாவது ஒரு காலகட்டத்தில் நமக்கு பயனளிக்க கூடியதாகவே இருக்கும். அந்த வகையில் வாழ்க்கையின் அனுபவங்களை மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

குறிக்கோள் தேவை

இவ்வுலகில் ஏனோ பிறந்துவிட்டோம் என வெந்ததை தின்று வாழ்வது ஒரு வாழ்க்கையே இல்லை. மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள், லட்சியம் இருக்க வேண்டும். லட்சியம் உள்ளவர்கள் மட்டுமே லட்சத்தினை காண்கின்றனர். லட்சியம் இல்லாமல் அலட்சியமாக இருந்தவர்கள் லட்சத்தை கடனில் தான் பார்க்கிறார்கள். உழைப்பில் அவர்களால் பார்க்க முடிவதில்லை. ஏன்? அவர்களிடம் லட்சியம் இல்லை. 

வாழ்க்கையில் லட்சியம் என்று ஒன்று இல்லாமல் வாழ்ந்தவர்கள் இன்று என்ன என்ன கஷ்டங்களை படுகின்றனர் என அவர்களிடம் கேட்டு பார்த்தால்தான் தெரியும். தயவு செய்து  படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி அல்லது வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி உங்களிடம் உங்கள் வீட்டின் பொறுப்புகள் சிலவற்றை இப்போதிருந்தே எடுத்து செய்ய பழகுங்கள்.  நாளை திருமணமாகி பொறுப்புகள் வந்த போது இந்த முன் அனுபவங்கள் அனைத்தும் உங்களுக்கு கற்றுக்கொடுக்கும். எனவே முடிந்தவரை  அனுபவம் இல்லாமல் மற்றவர்களிடம்பொறுப்புகளை சுமத்தி விட்டு  உங்கள் வாழ்க்கையினை நகர்த்த பார்த்தீர்களானால் உங்களுக்கு எதிர்காலத்தில் சொல்லமுடியாத சிரமங்கள் காத்திருக்கும். எனவே இப்போதிருந்தே பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள்...அதில் பல அனுபவங்கள் கிடைக்கும்.

பெற்றவர்கள் படிக்காவிட்டாலும் பிள்ளைகளை படிக்க படாத பாடுபட்டு படிக்க வைக்கின்றனர். ஆனால் பலன்...அது பூஜ்யமே. அந்த பெற்றவர்களையே புறக்கணிக்கும் பிள்ளைகளும்இந்நாட்டில் இருக்க த்தான் செய்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நீங்கள் எந்த வெற்றிகளைப் பெற்றாலும் அதில் உங்கள் பெற்றோரின் பங்கு நிச்சயம் இருக்கும். அவர்கள் மனதில் நினைத்தால்தான் நீங்கள் வெற்றிக்கோட்டினையே தொடமுடியும். அவர்களுடைய மனப்பூர்வமான ஆசிகள் இல்லாவிட்டால் வெற்றிக்கு தடை ஏற்படும். எனவே பெற்றோர்களை புறக்கணிப்பதை கைவிடுங்கள் .

பிரச்னைகளே வாழ்க்கை

வாழ்க்கை என்பதே பிரச்னைகள் நிறைந்ததுதான். பிரச்னைகளைக் கண்டு ஓடி ஒளிபவர்கள் வாழ்க்கையினை வாழ முடியாதவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அந்த வகையில் பிரச்னைகளை எதிர்த்து போராடி வெற்றி காண்பவர்களே இன்று வரை அதிகம் ஜெயித்துக்கொண்டிருக்கின்றனர்.இன்று வாழ்க்கையின் உயர்ந்த நிலைகளில் இருப்பவர்கள் எல்லோருமே சாதாரணமாக உயர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு முன்னேறியவர்களாகத்தான் இருப்பார்கள். எழுந்தால்தான் வெற்றி..வீழ்ந்தால் அனுபவம்தான். இதுபோன்றவர்களின் அனுபவத்தினை கேட்டு பாருங்களேன்...எத்தனை முறை விழுந்து எழுந்திருத்திருப்பார்கள் என்று.

ஆகவே எந்த சூழ்நிலையிலும் பிரச்னைகளைக் கண்டு ஓடி ஒளியாதீர்கள். தன்னம்பிக்கையோடு எதிர்த்து உங்களால் முடிந்த வரை போராடி பாருங்கள்..நிச்சயம் வெற்றி கிடைக்கும். கிடைத்தால் வெற்றி என நினைத்து கொள்ளுங்கள்..கிடைக்காவிட்டால் வாழ்வின் அனுபவமாக இருந்துவிட்டுபோகட்டுமே...

மனம் திறந்து பேசுங்க


உங்களுடைய  பள்ளி, கல்லுாரிகள், ஆபீஸ் எதுவானாலும் அன்றன்று நடக்கும் பிரச்னைகளை உங்களுக்கு மனதுக்கு பிடித்தவர்களிடம் தினந்தோறும் பகிர்ந்துகொள்ளுங்கள். அது எதுவாக இருந்தாலும் சரி. மனதில் வைத்து பூட்டினால்  அது பெரிய பாரமாகவே இருக்கும். எனவே உங்கள் வாழ்க்கையில்  நடக்கும் பிரச்னைகளை பகிர்ந்துகொள்ள ஒரு நம்பிக்கையான ஆளை வைத்து கொள்ளுங்கள். அது மனைவியாகவும் இருக்கலாம்., நட்பாக, உறவினராக யாராக இருந்தாலும் சரி . கொட்டிவிடுங்கள்...அப்போதுதான் உங்களுக்கு  அந்த பிரச்னைக்கும்  வழி தெரிய வரும். எனவே எதையும் மனம் திறந்து  பேசிவிடுங்க.

மனமிருந்தால் பணம் வரும்

மனிதர்களாக பிறந்தவர்களின் எல்லோருடைய குணமும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது. ஒரு குடும்பத்திலேயே ஐந்துபேர்இருந்தால் ஆளாளுக்கு ஒவ்வொருகுணமாக உள்ளனர். அது எப்படி சமுதாயத்தில் உள்ளவர்களின் குணங்கள் ஒரே மாதிரியாக இருக்கும். குணம் என்பது அவரவர்களின் மனநிலையை பொறுத்தது. மனம் விசாலமாக உள்ளவர்களிடம் நற்குணங்களை காணலாம். அதுவே குறுகிய மனம் உள்ளவர்களிடம் இத்தகைய நற்குணங்களை காண்பது அரிது. அதற்கு தகுந்தாற்போல்தான் அவர்களுடைய வாழ்வானது அமையும். இதுதான் ரிசல்ட். நல்ல மனம்இருந்தால்தான்உங்களிடம் பணம் கூட குடியிருக்கும். மனம் இல்லாதவர்களிடம் பணம் கூட இருக்க விருப்பப்படுவதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஆகவே நண்பர்களே உங்கள் வாழ்க்கை பயணத்தில் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு முயற்சியை கைவிடாமல் முயற்சி செய்யுங்க..நிச்சயம் ரிசல்ட்வெற்றிதான். எல்லாமே வெற்றி பெறுங்களா? என கேட்காதீங்க... வெற்றி பெறாததை வீழ்ந்தால் அனுபவம் என்று எளிதாக எடுத்து கொண்டு சந்தோஷமாக உங்க வாழ்க்கையை நகர்த்துங்க....

டேக் இட்ஈஸீ... விட்டு கொடுக்க பழகுங்க... வாழ்வு வளமாகும்..

(இன்னும் வளரும்...)

Tags:    

Similar News