'மனசே....மனசே..' தன்னம்பிக்கை தொடர் அறிமுகம்..! வியாழன்தோறும்..!
manase manase new topic on every thursday-இளைஞர்களுக்கு எழுச்சியூட்டி சிந்திக்க வைக்கும் ஒரு புதிய தொடர். இது படிப்பதற்கு மட்டுமல்ல;பாதுகாத்து வைக்கும் பொக்கிஷம்.;
இன்ஸ்டாநியூஸ் களத்தில் வியாழன் தோறும்..இளைஞர்களுக்கு வழிகாட்டும் புதிய தொடர்..!
மனசே... மனசே... புதிய தன்னம்பிக்கை தொடர் வியாழன்தோறும் உங்கள் கண்களை வியப்பில் ஆழ்த்தவரும் விறு..விறு..தொடர்.
'மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும்..!'
இறைவனின் படைப்பில் அனைவரும் ஒன்றே. இருந்த போதிலும் அவரவர்களின் பிறப்பு, கல்வி, வாழும் சூழ்நிலைகளினால் நாம் வேறுபடுகிறோம். தவிர படைக்கும்போது யாருமே வேறுபடுவதில்லை. அந்த வகையில் குழந்தை பருவம், இளம் சிறார் பருவம், குமரப்பருவம், கல்லுாரி மாணவ பருவம், ஆகியவைகளை கடந்து உத்வேகம் உள்ள இளைஞனாக உருவெடுத்தாலும், போட்டி மிகுந்த உலகில் நாம் எதிர் நீச்சல் போட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எங்கு சென்றாலும் போட்டி... போட்டி... ஏனெனில் திறமைக்கான களங்கள் அகன்று விரிந்துவிட்டன. அந்த வெற்றியை அடைவதற்கு இளைய சமுதாயம் இவ்வுலகில் போராடிக் கொண்டிருக்கிறது.ஒரு சிலருக்கு வழிகாட்ட ஆள் இருக்கிறது. ஆனால் கிராமப்புறத்தில் வாழும் பல இளைய தலைமுறைகளின் பெற்றோர் போதிய கல்வி அறிவு பெறாததால் அவர்களின் பிள்ளைகளுக்கு எதிர்காலம் குறித்து வழிகாட்ட ஆள் இல்லாமல் குழப்பமே மிஞ்சுகிறது.
இவையெல்லாம் கடந்து சாதனை படைத்து வரும் மாணவ, மாணவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு வழிகாட்டி யார்? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இவர்கள் தன் சொந்த முயற்சியினால் கேட்கும், பார்க்கும், படிக்கும் சுய ஞானத்தினால் சுயமாக முன்னேறுகின்றனர். இதுபோன்ற முயற்சியினை எல்லா இளையோரும் எடுக்கிறார்களா? என்றால் அதில்தான் பெரிய வெற்றிடம் உண்டாகிறது. இதற்கு என்ன காரணம்? வழிகாட்ட போதிய ஆட்கள் இல்லாததால் வழி தெரியாமல் விழி பிதுங்கி மனச்சோர்வு அடைந்து முயற்சியை கைவிடுகின்றனர். இது மாபெரும் தவறு. வாழ்க்கை என்பது வாழ்வதற்குத்தான்... அது வீழ்வதற்கல்ல...! விதைகள் கூட மண்ணில் வீழ்வதால்தான் துளிர்த்து எழுகிறது. மனதினை உற்சாகப்படுத்தும் செய்திகள் தன்னம்பிக்கையூட்டும் வரிகள், சோர்ந்து போன மனசை உற்சாகப்படுத்தும் வார்த்தைகள், முயற்சி இருந்தால் முன்னேறலாம் என்ற உத்வேகம் பெறும் வரிகளை வாசகர்கள் இந்த 'வழிகாட்டி' பகுதியில் இனி வாரந்தோறும் வியாழன் அன்று காணலாம்.... காத்திருங்கள்..ஒரு சில தினங்களில் மனசே... மனசே.... புதிய தன்னம்பிக்கை தொடரினை வாசிக்க,,,,(நம்பிக்கை இன்னும் வரும்)