ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் மேனேஜர் பணிகள்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் மேனேஜர் பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

Update: 2021-08-25 17:14 GMT

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் மேனேஜர் பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

1.பணியின் பெயர்: Deputy Manager (Agri Spl)

காலியிடங்கள்: 10 (UR-5, OBC-2, SC-2, EWS-1)

வயது வரம்பு: 25-லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.48,170 to 69,810

கல்வித்தகுதி: Rural Management/Agri Business-ல் MBA/PGDM-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Agriculture-ல் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Rela tionship Manager (OMP)

காலியிடங்கள்: 6 (UR-5, OBC-1)

வயதுவரம்பு: 25-லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.63, 840 to 78,230

கல்வித்தகுதி: BE/B.Tech. தேர்ச்சியுடன் MBA/PGDM படிப்பை முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Product Manager (OMP)

காலியிடங்கள்: 2 (UR-1, SC-1)

வயதுவரம்பு: 25-லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.63,840 to 78,230

கல்வித்தகுதி: Computer Science/IT/Electronics & Communication-ல் BE/B.Tech. படிப்புடன் MBA/PGDM பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.750. இதனை ஆன்லைனில் SBI வங்கி மூலம் செலுத்த வேண்டும். SC/ST/மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணைய தளமுகவரியில் (Advt. No : CRPD/SCO/2021-22/14 ) கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 2.9.2021.

Tags:    

Similar News