NCC பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பணிகள்

25 வயதிற்குள் இருக்க வேண்டும், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 3.11.2021

Update: 2021-10-27 07:22 GMT

கோப்பு படம்

இந்திய ராணுவத்தில் NCC பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு லெப்டினன்ட் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.


இதுபற்றிய விபரம் பின்வருமாறு:

பணியின் பெயர்: லெப்டினன்ட் GOT GOTL (NCC Special Entry)

காலியிடங்கள்:

ஆண்கள்: 50 (இதில் 5 இடங்கள் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசு களுக்கு உரியது)

பெண்கள்: 5 ( இதில் ஒரு இடம் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரியது)

சம்பளவிகிதம்: 1,77,500 - 756,100

வயதுவரம்பு: 1.1.2022 தேதிப்படி 19 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்று NCC-ல் 2 வருட பயிற்சி பெற்று 'C' சான்று பெற்றிருக்க வேண்டும்.

போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான பணியிடத்திற்கு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி

ஆண்கள்:

உயரம்: 152 செ.மீ. உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள்:

உயரம்: 148 செ.மீ. எடை: 42 கிலோ

உடற்திறன் தேர்வு:

2.4 கி.மீ தூரத்தை 15 நிமிடத்திற்குள் ஓடிக்கடக்க வேண்டும்.

Sit Ups: 25 , Push Ups: 13, Chin Ups: 6 எடுக்கும் திறன் மற்றும் 3 - 4 மீ தூரம் கயிறு ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் SSB நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

SSB நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள்: Allahabad, Bhopal, Bangalore, Kapurthala

தேர்விற்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பப்தாரர்களுக்கு AC 3 - Tier ரயில்/பேருந்து கட்டணம் வழங்கப்படும்.

SSB நேர்முகத் தேர்வின் போது ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (OTA, Chennai) 49 வாரங்கள் பயிற்சி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www. joinindianarmy.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 3.11.2021.

மேலும் முழு விபரங்களை படிக்க இந்த இணைப்பை சொடுக்குங்கள்: https://joinindianarmy.nic.in

இதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Tags:    

Similar News