இந்திய ரூபாய் நோட்டு அச்சகத்தில் ஜூனியர் டெக்னீஷியன் பணியிடங்கள்
வங்கிகளுக்கான ரூபாய் நோட்டு அச்சகத்தில் (Bank Note Press) பல்வேறு ஜூனியர் டெக்னீஷியன் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.;
வங்கிகளுக்கான ரூபாய் நோட்டு அச்சகத்தில் (Bank Note Press) பல்வேறு ஜூனியர் டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் அச்சகத்தில் ஜூனியர் டெக்னீஷியன் 81 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பதவி: ஜூனியர் டெக்னீஷியன்
காலிப்பணியிடங்கள்: 81
வயது வரம்பு:
18 முதல் 25 ஆண்டுகள், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், PH பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் தளர்வுகள் வழங்கப்படும்.
கல்வி தகுதி:
ஜூனியர் டெக்னீஷியன் (மை ஃபேக்டரி):
சாய தொழில்நுட்பம், பெயிண்ட் டெக்னாலஜி, சர்ஃபேஸ் கோட்டிங் டெக்னாலஜி, பிரிண்டிங் இன்க் டெக்னாலஜி, பிரிண்டிங் டெக்னாலஜி ஆகியவற்றில் முழுநேர ஐடிஐ சான்றிதழுடன் NCVT இலிருந்து ஒரு வருட NAC சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
ஜூனியர் டெக்னீஷியன் (பிரிண்டிங்):
லித்தோ ஆஃப்செட் மெஷின் மைண்டர், லெட்டர் பிரஸ் மெஷின் மைண்டர், ஆஃப்செட் பிரிண்டிங், பிளேட் மேக்கிங், எலக்ட்ரோபிளேட்டிங், ஹேண்ட் கம்போசிங், பேட் மேக்கர் கம் இம்போசிட்டர் ஆகிய அச்சு வர்த்தகத்தில் முழுநேர ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். NCVT இலிருந்து NAC சான்றிதழ்.
ஜூனியர் டெக்னீசியன்(எலக்ட்ரிகல்/ஐடி):
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் முழுநேர ஐடிஐ சான்றிதழுடன் என்சிவிடியிலிருந்து ஒரு வருட என்ஏசி சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.18780/- முதல் ரூ.67390/-
விண்ணப்பக் கட்டணம்:
ஜெனரல்/ஓபிசி/ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கு- ரூ.600/-
SC/ST/Ex-SM/ PWD பிரிவினருக்கு- ரூ.200/-
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28 .03.2022
Important Link:
மேலும் விபரங்களுக்கு: https://bnpdewas.spmcil.com/UploadDocument/81 post Advt. (Eng.).fa6850fb-8c92-4122-9b05-6aa83b6f468f.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://ibpsonline.ibps.in/bnpdfeb22/basic_details.php