மத்திய அரசின் Bank Note Press-ல் ஜூனியர் டெக்னீஷியன் பணிகள்

ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 28.3.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Update: 2022-03-12 03:52 GMT

மத்திய அரசுக்கு சொந்தமான Bank Note Press ஜூனியர் டெக்னீஷியன் பணி களுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விபரம் வருமாறு:


1.பணியின் பெயர்: Junior. Technician (Ink Factory)

காலியிடங்கள்: 60

கல்வித்தகுதி: Dyestuff Tec hnology/Paint Technology/ Surface Coating Technology/ Printing Ink Technology/Printing Technology இதில் ஏதாவது ஒன்றில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Junior Technician (Printing)

காலியிடங்கள்: 19

கல்வித்தகுதி: Printing Trade-ல் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Junior Technician (Electrical/IT)

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி: Electrical/Electronics பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் மேற்கண்ட 3 பிரி வுகளுக்கும் தேசிய அளவிலான அப்ரண்டிஸ் பயிற்சி சான்றி தழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.18,780/- 67,390/-


வயதுவரம்பு

மேற்கண்ட பணிகளுக்கு வயது: 25-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC/ST பிரிவினர்களுக்கு 5 வருட மும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் சலுகை உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும்முறை:

தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் OBC பிரி வினர்களுக்கு ரூ.600. SC/ST/ PWD/EX-SM பிரிவினர்க ளுக்கு ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் 28.3.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்ய வேண்டிய இணைய தள முகவரியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப் பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

Tags:    

Similar News