ICAR கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் இளம் தொழில்துறை வல்லுனர்களுக்கு வேலை
கோயம்புத்தூரில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் Young Professional க்கு வேலை வாய்ப்பு.
கோயம்புத்தூரில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் இளம் தொழில்துறை வல்லுநர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இது குறித்த விவரம் வருமாறு:
F.NO. 14-3/2021-Estt.
1. பணியின் பெயர் : Young Professional I ( F& A)
காலியிடங்கள் : 3
கல்வித்தகுதி : B.Com/ BBA/ BBA முதல் வகுப்பில் தேர்ச்சியுடன் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Young Professional I
காலியிடங்கள் : 4
கல்வித்தகுதி :
Computer Applications/ Information Technology/ Computer Science Software Engineering/ Operating System - ல் Graphics பிரிவில் இளநிலை பட்டம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பணிகளுக்கு வயது வரம்பு மற்றும் சம்பள விகிதம்:
வயதுவரம்பு: 21 லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூபாய் 25,000 /-
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து கல்விச் சன்றிதழ்களையும் ஸ்கேன் செய்து இணைத்து கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
Email id : aaoestab.shi@icar.gov.in
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15-7-2021.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.//sugarcane.icar.gov.in
என்ற இணையதள முகவரியில் முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யலாம்.