டிகிரி முடித்தவர்களுக்கு பொதுத்துறை வங்கிகளில் வேலை: காலியிடங்கள் 4135
வங்கிகளில் 4135 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன, ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.;
இந்திய பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள Probationary Officers/ Management Trainee பணிகளுக்கான காலியிடங்களுக்கு நியமனம் செய்ய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இது குறித்த விபரங்களாவன :
நிறுவனம் : இந்திய பொதுத்துறை வங்கிகள்
பணியின் பெயர்: Probationary Officers/Management Trainees
மொத்த காலியிடங்கள்: 4135
சம்பளவிகிதம்: IBPS விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயதுவரம்பு: 1.10.2021 தேதிப் படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், PWD/Ex-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் IBPS அமைப்பால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் எழுத்துத்தேர்வானது Preliminary தேர்வு மற்றும் Main எழுத்துத்தேர்வு என இரு கட் டங்களாக நடைபெறும். ஆன்லைன் எழுத்துத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும். ஆன்லைன் Preliminary & Main எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டம், நேரம் மற்றும் மதிப் பெண்கள் விபரம் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் Preliminary எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்:
சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், புதுச்சேரி.
ஆன்லைன் Main எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள்:
சென்னை, மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி.
ஆன்லைன் எழுத்துத்தேர்விற்கான Admit Card-ஐ இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து பெற்றுக் கொள் ளவும். ஆன்லைன் எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ளும் SC/ST/சிறுபான்மையினருக்கு இலவச Pre-Examination Training வழங்கப்படும். இதனை ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது குறிப்பிட வேண்டும்.
Pre-Examination Training நடைபெறும் இடங்கள்:
சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுச்சேரி.
விண்ணப்பக் கட்டணம்
ரூ.850 (SC/ST/PWD-ரூ.175). இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன் லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம், Left Thumb Impression மற்றும் Hand Written Declaration-ஐ ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் போன்ற முக்கிய விபரங்களை கீழே அட்டவணையில் காண்க
வங்கிகள் வாரியாக ஏற்பட்டுள்ள காலியிடங்கள் மற்றும் காலியிடப் பகிர்வு விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் முழு விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண கிளிக் செய்யுங்கள் : https://www.ibps.in