எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் தகுதிக்கு IRCON International நிறுவனத்தில் வேலை
ரயில்வே அமைச்சகத்தின் கீழுள்ள IRCON International நிறுவனத்தில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் தகுதிக்கு வேலை
இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழுள்ள பொதுத்துறை நிறுவனமான IRCON International நிறுவனத்தில் Work Engineer மற்றும் Site Supervisor பணிகளுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த விபரங்கள் :
1.பணியின் பெயர்: Works Engineer (Electrical)
காலியிடங்கள்: 21
வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Electrical Engineering-ல் 60% மதிப்பெண் களுடன் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.36,000
2. பணியின் பெயர்: Site Supervisor (Electrical)
காலியிடங்கள்: 13
வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.25,000
கல்வித்தகுதி: Electrical Engineering-ல் 60% மதிப்பெண்களுடன் முழுநேர டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட 2 பணியிடத்திற்கும் Electrical Construction Works-ல் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெ டுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
www.ircon.org என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை A4 அளவு வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர் முகத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் முழுமையான விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பைக் காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : https://www.ircon.org
இதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.