திருச்சி சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு: 20ம் தேி கடைசிநாள் உடனே விண்ணப்பிங்க
திருச்சி சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 31 பணியிடங்களுக்கு விண்ணபிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 20ம் தேிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.;
திருச்சி மாவட்ட சுகாதாரச் சங்கம், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் தற்காலிக அடிப்படையில் மருத்துவ அலுவலர், மேற்பார்வையாளர், கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பட உள்ளன. மொத்தம் 31 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
மருத்துவ அலுவலர் (TB Cell Medical Officer)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை- 01
கல்வித் தகுதி - MBBS படித்திருக்க வேண்டும்.
நுண்ணுயிரியலாளர் (Microbiologist)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை- 01
கல்வித் தகுதி - M.D Microbiology அல்லது M.Sc applied Microbiology படித்திருக்க வேண்டும்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை- 02
கல்வித் தகுதி -ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் Sanitary Inspector course படித்திருக்க வேண்டும்.
காசநோய் சுகாதாரப் பார்வையாளர்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை-02
கல்வித் தகுதி - இளங்கலை பட்டப்படிப்பு அல்லது செவிலியர் படிப்பு படித்திருக்க வேண்டும்.
முதுநிலை ஆய்வக நுட்புனர் (Senior Lab Technician)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை- 04
கல்வித் தகுதி - B.Sc Microbiology or Biotechnology படித்திருக்க வேண்டும். அல்லது ஆய்வக நுட்புனர் டிகிரி அல்லது டிப்ளமோ (DMLT) படித்திருக்க வேண்டும்.
ஆய்வக நுட்புனர்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 16
கல்வித் தகுதி - 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் ஆய்வக நுட்புனர் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 03
கல்வித் தகுதி - இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் ஆய்வக நுட்புனர் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
கணக்காளர் (Accountant)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 01
கல்வித் தகுதி - இளங்கலை வணிகவியல் படித்திருக்க வேண்டும்.
தரவு உள்ளீடு இயக்குவர் (Data entry operator)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை- 01
கல்வித் தகுதி - 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை - இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது சுய விவர விண்ணப்பக் கடிதத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
முகவரி :
துணை இயக்குனர், மருத்துவப் பணிகள் (காசம்), மாவட்ட காசநோய் மையம், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகம், புத்தூர், திருச்சிராப்பள்ளி – 620017
விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.11.2021
மேலும் இது தொடர்பாக முழு விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்திரிகை விளம்பரத்தினை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.