சென்னை சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு: 29ம் தேதி கடைசிநாள் உடனே விண்ணப்பிங்க
சென்னை சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 89 பணியிடங்களுக்கு விண்ணபிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29ம் தேிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.;
சென்னை மாவட்ட சுகாதாரச் சங்கம், தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் தற்காலிக அடிப்படையில் மருத்துவ அலுவலர், மேற்பார்வையாளர், மருந்தாளுனர், கணக்காய்வாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பட உள்ளன. மொத்தம் 89 பணியிடங்கள் நிரப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. தகுதியுள்ளவர்கள் நவம்பர் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை- 6
கல்வித் தகுதி :-MBBS படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 45,000
மாவட்ட DPC திட்ட ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை- 2
கல்வித் தகுதி - MBA/ PG Diploma in Health Administration படித்திருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 20,000
மாவட்ட DRTB /HIV TB ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை- 1
கல்வித் தகுதி - இளங்கலை அறிவியல் படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ; ரூ. 19,000
மாவட்ட PPM ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை- 3
கல்வித் தகுதி -MSW/ M.Sc உளவியல் படித்திருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் ; ரூ. 19,000
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை- 3
கல்வித் தகுதி -இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் மற்றும் சுகாதாரத்துறையில் 1 வருட பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை -2
கல்வித் தகுதி - இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் மற்றும் Sanitary Inspector course படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000
மருந்தாளுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை -3
கல்வித் தகுதி - B.Pharm/ D.Pharm படித்திருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000
ஆய்வக தொழில் நுட்ப வல்லுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை - 58
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் அறிவியல் படித்திருக்க வேண்டும். மற்றும் டிப்ளமோ ஆய்வக நுட்புனர் (DMLT) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000
TB சுகாதாரப் பார்வையாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: - 5
கல்வித் தகுதி - இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் சுகாதாரத்துறையில் 1 வருட பணி அனுபவம் அவசியம்.
கணினி இயக்குபவர்
காலியிடங்களின் எண்ணிக்கை -1
கல்வித் தகுதி :-12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000
ஆற்றுப்படுத்துனர் DRTB மையம்
காலியிடங்களின் எண்ணிக்கை - 4
கல்வித் தகுதி : இளநிலைப் பட்டம் (சமூகவியல், சமூகப் பணி, உளவியல்) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000
கணக்காய்வாளர் (Accountant)
காலியிடங்களின் எண்ணிக்கை: -1
கல்வித் தகுதி : இளங்கலை வணிகவியல் படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000
தேர்வு செய்யப்படும் முறை - இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை - இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/pdf/NTEP_Application.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி -
திட்ட அலுவலர், திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் (NTEP), மாவட்ட காசநோய் மையம், 26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை – 600012
விண்ணப்பிக்க கடைசி தேதி - 29.11.2021
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/gcc/pdf/NTEP_Application.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.