திருச்சி மலைக்கோட்டை கோயிலில் வேலை வாய்ப்பு : உடனே விண்ணப்பிங்க

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயிலில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 29ம் தேதியே கடைசி நாளாகும்.;

Update: 2021-12-10 08:02 GMT

திருச்சி மகை்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் அரசு வேலை வாய்ப்பு

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் திருச்சி மலைக்கோட்டை, அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தட்டச்சர் - 01

சம்பளம்: மாதம் ரூ.18,500 - ரூ.58,600.

கணினி இயக்குநர் - 01

தொழில்நுட்ப உதவியாளர் - 01

சம்பளம்: மாதம் ரூ.20,600 - ரூ.65,500 .

தூய்மை பணியாளர் - 10

சம்பளம்: மாதம் ரூ.10,000 - ரூ.31,500.

கல்வி தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பொறியியல் துறையில் பட்டம், இளநிலைப் பட்டம் பெற்றவர்கள், தட்டச்சு பயிற்சி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : வேலை நாள்களில் கோயிலில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 29.12.2021

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: உதவி ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக் கோட்டை, திருச்சி -2 மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும், கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்திரிகை விளம்பரத்தினை பாரத்தும் தெரிந்து கொள்ளலாம்.



Tags:    

Similar News